தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விருமன் படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி ரிலீசாக உள்ளது.
அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, கர்ணன் பட நடிகை ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.
சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சர்தார் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை அசர்பைஜான் நாட்டில் உள்ள பாராளுமன்றத்தில் படமாக்கி உள்ளார்களாம். அங்கு நடத்தப்பட்ட முதல் சினிமா படப்பிடிப்பு சர்தார் உடையது தானாம். இதற்காக படக்குழு ரூ.4 கோடி செல்வழித்ததாக கூறப்படுகிறது. சர்தார் படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... T Rajendar : அவசர அவசரமாக அமெரிக்கா பறந்த சிம்பு... டி.ஆர். உடல்நிலை எப்படி இருக்கிறது?