பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங். இவர் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி என்கிற படத்தில் தோனியின் கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள குடியிருப்பில் இருந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என ரசிகர்களும், சுஷாந்த் சிங்கின் உறவினர்களும் குற்றம்சாட்டினர். பாலிவுட்டில் உள்ள வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது.
சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை போலீஸ், பீகார் போலீஸ், அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சிபிஐ என 5 அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும் இதுவரை அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது மர்மமாகவே உள்ளது.