“பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை”.... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல வாரிசு நடிகர்...!

First Published | Sep 23, 2020, 7:19 PM IST

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என பிரபல நடிகர் நாசரின் இளைய மகன் அபி ஹசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

​தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் நான்காவது சீசன் துவங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
Tap to resize

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 3 சீசன்களில் வெளியானதை விட பல மாற்றங்கள் இந்த முறை செய்யப்பட்டுள்ளது. ​ஆனால் இம்முறை, 12 போட்டியாளர்கள் மற்றும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
அதை உறுதிபடுத்தும் விதமாக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகிய 9 பேரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஒட்டலில் ஒன்றில் குவாரன்டைனில் உள்ளார்களாம்.
ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கமலின் நண்பருமான நாசரின் இளைய மகன் அபிஹசன் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.
விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்தில் கமல் மகள் அக்‌ஷாராவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அபிஹசனின் நடிப்பி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு புகழ் மற்றும் பப்ளிசிட்டியோடு படவாய்ப்புகளும் கிடைக்கும். அதனால் கமல் ஹாசனின் சிறப்பு பரிந்துரையின் பேரில் நாசர் மகன் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. நாசரின் மகன் என்பதால் பிக்பாஸ் வீட்டில் கமலின் செல்லப்பிள்ளை இவர் தான் என்றும், டைட்டில் வின்னராக கூட வர வாய்ப்புள்ளதாகவும் வதந்திகள் பரவின.
ஆனால் அதை அபிஹசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்றும், அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!