Jana Nayagan: காஷ்மீர் ஃபைல்ஸ்க்கு கிடைக்குது.. ஜனநாயகனுக்கு ஏன் இல்லை?" - தணிக்கை வாரியத்தை வறுத்தெடுத்த மன்சூர் அலி கான்!

Published : Jan 28, 2026, 01:20 PM IST

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் பொங்கல் வெளியீட்டில் இருந்து முடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலி கான், தணிக்கை வாரியத்தின் பாரபட்சமான செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். 

PREV
13
ஆவேசமான மன்சூர் அலி கான்!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில், எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படம், விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதான கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், கடைசி நேரத் தணிக்கை சிக்கல்களால் முடக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தனது காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நடிகர் மன்சூர் அலி கான், தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். "சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்ட காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்களுக்குத் தடையின்றி தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், ஒரு மக்கள் நாயகனின் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

23
பொங்கலுக்கு வராத படம் என்ன பக்ரீத்துக்கா வரும்?

டிசம்பர் மாதமே படத்தைத் தணிக்கைக்கு அனுப்பிய பிறகும், யாரோ கொடுத்த ஆதாரமற்ற புகாரைக் காரணம் காட்டி, தணிக்கை வாரியம் படத்தை மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது என்பது படக்குழுவின் வாதம். இது குறித்துப் பேசிய மன்சூர் அலி கான், "பொங்கலுக்கு வராத படம் என்ன பக்ரீத்துக்கா வரும்? தணிக்கை வாரியம் என்பது மத்திய அரசின் பிடியில் இருக்கும் அமைப்பாக இல்லாமல், சினிமாத்துறையைச் சார்ந்த நடுநிலையாளர்கள் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த அமைப்பே தேவையில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

33
படைப்பை முடக்குவது நேர்மையல்ல

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளதால், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகியுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருந்த ஒரு பிரம்மாண்ட படைப்பு, அரசியல் மற்றும் தணிக்கை காரணங்களால் முடக்கப்பட்டிருப்பது சினிமா ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories