நீச்சல் போட்டியில் 5 தங்கம்... 2 வெள்ளி பதக்கத்தை தட்டி தூக்கிய மாதவனின் மகன் வேதாந்த்..! குவியும் ரசிகர்கள் வ

Published : Feb 12, 2023, 05:02 PM IST

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2022 போட்டியில், 5 தங்கம், மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றி தனக்கு பெருமை சேர்த்த விஷயம் குறித்து புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மாதவன்.  

PREV
14
நீச்சல் போட்டியில் 5 தங்கம்... 2 வெள்ளி பதக்கத்தை தட்டி தூக்கிய மாதவனின் மகன் வேதாந்த்..! குவியும் ரசிகர்கள் வ

தமிழில், மின்னலே, அலைபாயுதே, ரன்,  போன்ற ரசிகர்கள் மனதை விட்டு என்றும் நீங்காத எதார்த்தமான வெற்றிப்படங்களில் நடித்து, சாக்லேட் பாய் என பெயர் எடுத்தவர் நடிகர் மாதவன். தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, பாலிவுட் திரையுலகிலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

24

சமீப காலமாக, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மாதவன். அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான இறுதி சுற்று, விக்ரம் வேதா, ராக்டரி போன்ற படங்கள் இது மாதவனா? என அனைவரையுமே வியப்படைய செய்யும் விதத்தில் இருந்தது.

ஆண்ட்டி ஆனாலும் அடங்காத நடிகை கிரண் ரத்தோர்... 42 வயதில் உச்சகட்ட கவர்ச்சியில் களியாட்டம் ஹாட் போட்டோஸ்!

34

நடிகர் மாதவனை திரையுலகில் மிகவும் பிரபலம் என்றால், இவரின் மகன் வேதாந்த் விளையாட்டு துறையில் மிகவும் பிரபலம். ஸ்டேட் மற்றும் இன்டர்நெஷனல் ஸ்விம்மிங் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர்,கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2022ல் பல பதக்கங்களை வென்றுள்ளார் என்ற செய்தியை நடிகர் மாதவன் பெருமிதத்தோடு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

44

இது குறித்து அவர்  தனது மகன் விருதுகள் மற்றும் பதக்கங்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை ட்வீட் செய்து, “தன்னுடைய மகன் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். வேதத்துக்கு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

பாகுபலி நடிகர் ராணா மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு! ரவுடிகளை ஏவி மிரட்டியதாக பரபரப்பு புகார்..!

click me!

Recommended Stories