மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெயராம். இவர் தமிழிலும் தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.
சமீபத்தில் கேரள மாநில விவசாயத்துறை சார்பில் விவசாய தின விழா நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறந்த விவசாயிக்கான விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கையால் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டார் நடிகர் ஜெயராம். இந்த விழாவில் ஜெயராமின் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.