பிருத்விராஜ் முதல் கவுதம் மேனன் வரை... தளபதி 67-ல் மிரட்ட உள்ள 6 மாஸ் வில்லன்களின் லிஸ்ட் இதோ..!

First Published | Aug 19, 2022, 10:06 AM IST

Thalapathy 67 : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் வில்லனாக மிரட்ட உள்ள 6 நடிகர்கள் பற்றிய முழு விவரம் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும் லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ள படம் தளபதி 67. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். மும்பையை மையமாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் விஜய் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர நடிகர் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிக்க உள்ளதாகவும், அதற்கான தேர்வும் நடைபெற்று வந்தது.

இதையும் படியுங்கள்... நடிகை திரிஷாவுக்கு திடீரென வந்த அரசியல் ஆசை.... தேசிய கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்க திட்டம்..!

Tap to resize

முன்னதாக வெளியான தகவல்படி நடிகர் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இதர இரண்டு வில்லன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதியும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் தான் அந்த இரண்டு பேராம்.

இதன்மூலம் தளபதி 67 திரைப்படம் நிச்சயம் பான் இந்தியா படமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த 6 வில்லன்களில் நடிகர் விஜய் சேதுபதி மட்டும் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார். மற்ற 5 பேரும் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார்கள் என்பதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... அருண் விஜய்யின் தமிழ் ராக்கர்ஸ் டீமுக்கு அதிர்ச்சி கொடுத்த ரியல் தமிழ் ராக்கர்ஸ் - முழு வெப் தொடரும் லீக்கானது

Latest Videos

click me!