அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?

First Published | Aug 19, 2022, 11:06 AM IST

Suriya : சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, சமீப காலமாக மும்பைக்கு அடிக்கடி சென்று வருவதன் பின்னணியில் உள்ள பிசினஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக விக்ரம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்கள் வந்தன. இந்த இரண்டு படங்களிலுமே அவர் கெஸ்ட் ரோலில் தான் நடித்திருந்தார். குறிப்பாக விக்ரம் படத்தில் இவர் நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி அவர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது.

தற்போது நடிகர் சூர்யா கைவசம் வணங்கான், சூர்யா 42 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வணங்கான் படத்தை பாலா இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... பிருத்விராஜ் முதல் கவுதம் மேனன் வரை... தளபதி 67-ல் மிரட்ட உள்ள 6 மாஸ் வில்லன்களின் லிஸ்ட் இதோ..!

Tap to resize

விரைவில் சூர்யாவின் 42-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. சிறுத்தை சிவா இயக்க உள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்க உள்ளது. மேற்கண்ட இரண்டு படங்களையும் முடித்த பின்னர் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, சமீப காலமாக மும்பைக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர் அங்கு பல தொழில்களில் ரூ.200 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யாவுக்கு மாதம் ரூ.20 கோடிவரை வருமானம் வருகிறதாம். இந்த பிசினஸ் விஷயமாகத் தான் அவர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... தமிழ் ராக்கர்ஸில் புதிய படத்தை லீக் செய்த 2 பேர் அதிரடி கைது! விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்!

Latest Videos

click me!