
பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில வாரங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து குறித்த செய்திகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் தனது மனைவியை பிரிய உள்ளதாக அறிவித்த ஜெயம் ரவி, ஆர்த்தியின் குடும்பத்தார் தன்னுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவும், தன்னுடைய அனைத்து பட பணிகளிலும் தலையிடுவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் ஆர்த்தி தரப்பிலிருந்து வெளியான தகவல்களின்படி, ஜெயம் ரவி எடுத்த அந்த விவாகரத்து முடிவு பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும், கடந்த சில வாரங்களாகவே ஜெயம் ரவியை நேரில் சந்தித்து பேச தான் ஆவணம் செய்து வந்ததாகவும், ஆனால் அதற்கு அவர் அருகில் இருப்பவர்கள் அதற்கு உடன்படவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். இந்நிலையில் ரவி, பிரபல யுடியூபர்கள் சிலரை நேரில் அழைத்து அவர்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போ தேசிங்குக்கு டாடாவா? Thug Life முடியும் முன்பே அடுத்த பட பேச்சுவார்த்தையை துவங்கிய STR?
அதன்படி பிரபல YouTuber ஷா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். முதலில் ஜெயம் ரவி தான் தன்னை அழைத்து பல விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று கூறியதாகவும். அதற்கு, நீங்கள் சொல்ல வேண்டியதை என் மூலம் சொல்வதைக் காட்டிலும், நேரடியாக உங்கள் சமூக வலைதள பக்கங்களின் மூலம் சொல்லினால் மக்களுக்கு இன்னும் தெளிவாக புரியும் என்று தான் கூறியதாகவும். ஆனால் அவர் வெளியிடும் வீடியோக்களை அவருடைய மகன்களும் பார்க்கக்கூடும். அவர்களுடைய தாய் பற்றி நான் பேசும் எதுவும் அவர்களுக்கு தெரியக்கூடாது. இதனால் தான் நான் மாற்று ஊடகங்கள் மூலம் எங்களுக்கு இடையே நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஜெயம் ரவி கூறியதாக யூடியூபர் ஷா தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்ட தகவல்கள் பின்வருமாறு...
"ஆர்த்தியுடனான இந்த பிரிவு முடிவுக்கு முன்னதாக, எனது இரண்டு மகன்களில் மூத்த மகனிடம், நான் உங்களுடைய அம்மாவை பிரியப்போகிறேன் என்று கூறினேன். நான் பேசியதை புரிந்து கொண்ட என் மகன், உன்னுடைய சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம், ஆனால் நீங்கள் இணைந்திருந்தால் எனக்கு ரொம்பவும் சந்தோஷம் என்று கூறினான். அவனை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய நான், இது எல்லாம் கொஞ்சம் காலத்திற்கு தான், பிறகு எல்லாமே சரியாகிவிடும். உங்களை நான் பார்க்காமல் இருக்கவே மாட்டேன் என்று கூறினேன்".
"என்னுடைய இரு மகன்களில் ஒருவருக்கு ஜூன் மாதம் பிறந்தநாள் நடந்தது அப்போது ஆர்த்தியோடு இணைந்து குடும்பமாகத்தான் அந்த பிறந்த நாளை கொண்டாடினோம். அதேபோல மற்றொரு மகனுக்கு ஆகஸ்ட் மாதம் பிறந்தநாள் வந்தது. அவருக்காக பர்த்டே செலிப்ரேஷன் கொண்டாட நான் பிரபல ஹோட்டல் ஒன்றில் காலை முதல் மாலை வரை காத்திருந்தேன். ஆனால் மாலையில் தான் எனக்கு அவர்கள் இலங்கைக்கு சென்று விட்டது தெரியும். நான் அன்று என் மகனை பார்க்கவே கூடாது என்பதற்காக ஆர்த்தி திட்டமிட்டு அந்த வெளிநாட்டு பயணம்மேற்கொண்டார்".
"இதில் நான் பிள்ளைகளை கவனிப்பதில்லை என்று என் மீது வீண் பலி சுமத்துகிறார். கடந்த 13 ஆண்டுகளாக எனக்கு என்று தனியாக ஒரு வங்கி கணக்கு கிடையாது. என் மனைவியின் வங்கி கணக்கோடு இணைந்து தான் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஒன்று வைத்திருக்கிறேன். ஆனால் என் மனைவிக்கு தனியாக மூன்று நான்கு வங்கி கணக்குகள் இருக்கின்றது. நான் வெளியில் சென்று செய்யும் செலவுகளுக்கான கணக்கு கூட அவருக்குத்தான் நேரடியாக செல்லும். இதுகுறித்து நான் அவரிடம் ஏன் என்று கேட்ட பொழுது, நீங்கள் ஒரு ஹீரோ உங்களுடைய பிரைவசி ரொம்பவும் முக்கியம், அதனால் தான் அதை நானே மெயின்டேன் செய்கிறேன் என்று கூறிவிடுவார்".
"ஆர்த்தி தனக்கென்று லட்சக் கணக்குகளில் செலவு செய்து கொள்வார். ஆனால் நான் வெளிநாடுகளுக்கு சூட்டிங் செல்லும்போது வெளியில் சென்று ஏதாவது உணவு சாப்பிட்டு விட்டு எனது காடை ஸ்வைப் பண்ணினால் கூட, உடனடியாக மெசேஜ் பார்த்துவிட்டு நான் என்ன சாப்பிட்டேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்பார். அது அவரே என்னை போனில் அழைத்து கேட்டிருந்தாலும் பரவாயில்லை, சுற்றி இருக்கும் எனது உதவியாளர்களிடம் கேட்கும்பொழுது எனக்கு மிகவும் மன வேதனையை கொடுத்தது".
"ஒரு முறை என்னுடைய திரைப்படம் ஒன்று பெரிய அளவில் வெற்றி பெற்றது, அதற்காக படக்குழுவினருக்கு நான் ட்ரீட் வைத்தேன். அப்பொழுது நான் அந்த விழாவுக்காக பணத்தை கொடுத்த மறுநிமிடம் அந்த மெசேஜ் அவருக்கு சென்று நிலையில், உடனடியாக என்னுடைய அசிஸ்டன்களிடம் கால் செய்து, யார் யார்? அந்த பார்ட்டிக்கு வந்தார்கள். ஏன் இந்த பார்ட்டி நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது என் உதவியாளர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்" என்று பல விஷயங்களை அவர் மனம் நொந்து பகிர்ந்துள்ளார்.