அஜய்குமார், என்று பெயர் இருந்தாலும் கின்னஸ் பக்ரூ என கூறினால் தான் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றாக தெரியும்.
மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான இவர், ஒரு திரைப்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்ததற்காக மிகவும், உயரம் குறைந்த நடிகர் (64.008 செ.மீ. உயரம்) என்று கின்னஸ் புத்தகத்தில் இடைபிடித்தார்.
வினயன் இயக்கிய 'அல்பூத த்வீப்' மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழிலும், டிஷ்யூம், அற்புதத் தீவு, தலையெழுத்து, காவலன், ஏழாம் அறிவு உள்பட பல படங்களில் நடிகர் பக்ரூ நடித்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் பக்ரூ, தனது மனைவி காயத்ரி மோகன் மற்றும் மகள் தீப்தா கீர்த்தி ஆகியோர் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்றும்? அசப்பில் அவர் ஹீரோயின் போல் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.