கத்தாரில் நடந்த ஃபிபா உலக கோப்பையை கண்டுகளிக்க குடும்பத்துடன் சென்ற அருண் விஜய்..! வைரலாகும் போட்டோஸ்!

First Published | Dec 19, 2022, 3:54 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், அருண் விஜய் நேற்று நடந்த ஃபிபா உலக கோப்பை ஃபைனலை நேரில் பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நேற்றைய தினம், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. கத்தாரில் நடந்த இறுதி போட்டியை காண, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்... உள்ளிட்ட அனைத்து மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கத்தார் நாட்டுக்கு பறந்தனர்.

நேரில் சென்று, போட்டியை பார்க்க முடியாத பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைத்து வேலைகளையும் புறக்கணித்துவிட்டு டிவியில் இந்த போட்டியை கண்டு ரசித்தனர்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை... அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றியை அதகளமாக கொண்டாடிய சினிமா நட்சத்திரங்கள்

Tap to resize

பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில், பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது, இந்த வெற்றி வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது. குறிப்பாக அர்ஜென்டினா வெற்றியை இந்தியர்கள் தங்கள் நாட்டின் வெற்றிபோல் கொண்டாடி அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியை, நடிகர் அருண் விஜய்... குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார். ஸ்டேடியம் மற்றும் வெளிப்புறத்தில் தன்னுடைய மகன், மகள், மனைவி, மற்றும் சகோதரிகள் அவரின் கணவர் ஆகியோரோடு இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ... பல இடங்களில் காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

நடிகர் அருண் விஜய்யின் அர்ஜென்டினா நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே, நேரில் சென்று ஃபிபா உலக கோப்பையை பார்த்து ரசித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!