Published : May 02, 2022, 05:00 PM ISTUpdated : May 02, 2022, 05:05 PM IST
பிரபல தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து அடுத்தடுத்து பிரபலங்கள் விலகுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிகண்ணம்மா சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. விஜய் டிவி டிஆர்பியில் எப்பொழுதும் பாரதிகண்ணம்மா தான் முன்னிலையில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மாவில் வினுஷா தேவி, அருண்பிரசாத், ஃபரீனா, ரூபஸ்ரீ, ராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
29
bharathi kannamma
முன்னதாக கண்ணம்மாவாக ரசிகர்களை கவர்ந்து வந்த ரோஷ்னி சினிமா வாய்ப்புக்காக சீரியலில் இருந்து திடீரென விலகியதை அடுத்து இவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
முன்னதாக பாரதிகண்ணம்மாவில் கண்ணம்மாவின் தந்தையாக நடித்து வந்த வெங்கடேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
49
bharathi kannamma
பின்னர் பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா பிரசவத்திற்காக சென்றுவிட்டார். இதையடுத்து வெண்பா சிறைச்சாலைக்கு சென்றது போன்ற கதை தோற்றத்தை பாரதிகண்ணம்மா இயக்குனர் உருவாக்கி இருந்தார். பின்னர் பிரசவம் முடிந்தவுடன் மீண்டும் சீரியலில் வில்லியாக என்று கொடுத்துவிட்டார் ஃபரீனா.
59
Bharathi kannamma
பின்னர் கண்ணம்மாவின் தங்கையாக நடித்து வந்த அஞ்சலி அதாவது கண்மணி மனோகரன் வேறு ஒரு சீரியலில் முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
இவ்வாறு அடுத்தடுத்து நடிகர்களின் விலகல் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு பெரும் அடியை கொடுத்து வந்ததோடு, டிஆர்பியிலும் பின்தங்கிவிட்டது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான நாடகங்கள் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பி ரேட்டிங்கை முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
89
bharathi kannamma
இந்நிலையில் பாரதிகண்ணம்மாவில் நாயகனாக நடித்து வந்த அதாவது பாரதியாக நடித்து வந்த அருண்பிரசாத் சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது
99
bharathi kannamma
இந்நிலைகள் பாரதியாக நடிக்க பிரபலத்தை புக் செய்துள்ளனராம். அருண் பிரசாத்துக்கு பதிலாக தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் தற்போது ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5-ல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.