நடிகர் அஜித் நடிப்பதோடு மட்டுமின்றி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.
துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 6 பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கான பரிசளிப்பு விழா கடந்த ஜூலை 28-ந் தேதி நடைபெற்றது. ஆனால் அஜித் அதில் பங்கேற்கவில்லை. ஏனெனில் அதற்கு முந்தைய தினம் அஜித்தை பார்க்க திருச்சி ரைபிள் கிளப் வாயிலில் ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர்.
மறுதினமும் இருந்தால் ரசிகர்கள் பெருமளவில் குவிந்து விடுவார்கள் என்பதனால் ஜூலை 27-ந் தேதி இரவே நடிகர் அஜித், திருச்சியில் இருந்து சென்னை கிளம்பி வந்துவிட்டார். ஜூலை 27-ந் தேதி மாலை திருச்சி ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் தனது ரசிகர்களை சந்தித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Watch : திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்!