உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... காதல் மனைவியுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற அஜித் - வைரலாகும் போட்டோஸ்

Published : Aug 27, 2023, 08:44 AM IST

நடிகர் அஜித், தனது மனைவி மற்றும் பள்ளிக் குழந்தைகளோடு ஜாலியாக சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
15
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... காதல் மனைவியுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற அஜித் - வைரலாகும் போட்டோஸ்
Ajith Shalini

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்கிற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

25
Ajith

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இழுத்தடித்து வந்ததால் இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர், விடாமுயற்சி கண்டிப்பாக உருவாகும் என உறுதியளித்தார்.

இதையும் படியுங்கள்... எனக்கு நடிக்குற தகுதியே இல்லனு சொன்னாங்க..! 'சந்திரமுகி ' இசைவெளியீட்டு விழாவில் வடிவேலு குமுறல்!

35
Ajith wife shalini

கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் பைக் சுற்றுலா செய்து வந்த அஜித், அண்மையில் சென்னை திரும்பினார். இதனால் விரைவில் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

45
Ajith cycling

சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்ந்தா அஜித் மாதிரி வாழ வேண்டும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 

55
Ajith latest photos

அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர். சைக்கிளிங் சென்றபோது அஜித் அவரது காதல் மனைவி ஷாலினியுடன் எடுத்த கேண்டிட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அங்கு வந்திருந்த பெற்றோர்களும் அஜித் ஷாலினி ஜோடியுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்... காந்தியை கொன்றவர்கள்... 'ஜெய்பீம்' படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? பிரகாஷ் ராஜ் பரபரப்பு ட்வீட்!

click me!

Recommended Stories