யோகிபாபுவின் ‘அக்யூஸ்ட்’ படத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய புழல் சிறை!

Published : Feb 07, 2025, 01:59 PM IST

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொய்வின்றி நடைபெறும் நிலையில் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட உள்ளனர்.

PREV
12
யோகிபாபுவின் ‘அக்யூஸ்ட்’ படத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய புழல் சிறை!
புழல் சிறையில் ஷூட்டிங்

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதியாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். 

இப்படத்தில் நாயகியாக பிரபல கன்னட நடிகை ஜான்விகா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று ‘அக்யூஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதயா மற்றும் அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் இதில் பங்கேற்று நடித்தனர். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு யோகி பாபு உள்ளிட்டோரின் சிறப்பான பங்களிப்போடு தொய்வின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்...கூலி ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டு சிட்டாக பறந்த ரஜினி - எங்கு சென்றிருக்கார் தெரியுமா?

22
அக்யூஸ்ட் திரைப்படம்

தற்போது சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சில்வா தான் இதில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மிக அதிக பொருட்செலவில் 'அக்யூஸ்ட்' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் ஷூட்டிங்கை நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் கதைக்களத்துடன் ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...பிரகாஷ் ராஜ் பற்றி சரியாக கணித்த சோபன் பாபு; அப்படியே நடந்த ஆச்சர்யம்!

click me!

Recommended Stories