படப்பிடிப்புக்கு இடையே ஒய்வு நேரத்தை செலவிட உலகை சுற்ற புறப்பட்டார் அஜித் குமார். இவர் ஐரோப்பா நாடுகள் மற்றும் பாரிஸில் பைக் உலா வந்த காட்சிகள் வைரலாகின. தற்போது சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பி உள்ள அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான வீடியோவும் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!
முன்னதாக அஜித் ஏர்போர்ட்டிற்கு வந்த வீடியோவில் அவர் உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். இந்நிலைகள் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.