With Love Movie Day 1 Box Office : வித் லவ் படம் வாரிசுருட்டிய வசூல் இத்தனை கோடியா?

Published : Feb 07, 2026, 01:01 PM IST

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள வித் லவ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
With Love Movie Box Office

டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனவர் தான் அபிஷன் ஜீவிந்த், அப்படத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையை சாம்பிளாக காட்டி இருப்பார். அவர் தன்னுடைய முழு நடிப்புத்திறமையையும் இறக்கி இருக்கும் படம் தான் வித் லவ். இப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை மதன் இயக்கி உள்ளார். இப்படம் திரையரங்குகளில் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

24
வித் லவ் விமர்சனம்

வித் லவ் ஒரு மென்மையான, ஃபீல்-குட் ரொமான்டிக் திரைப்படம். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகி, தன்னுடைய யதார்த்த நடிப்பால் மனதில் நிற்கிறார். பள்ளி நினைவுகள், பழைய காதல், இரண்டாவது சான்ஸ் என எல்லாம் அழகா இணைக்கப்பட்டிருக்கும் படம் இது. அனஸ்வரா ராஜன் கண்கள், முகபாவனைகளாலேயே உணர்வுகளை பேசுற மேஜிக் சூப்பர். காவ்யா அனில் முன்னாள் காதலியாக வர்றது ஹார்ட் டச் மொமண்டாக இருக்கிறது.

34
வரவேற்பை பெறும் வித் லவ்

முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாகவும், சில வசனங்கள் செயற்கையாகவும் தெரிஞ்சாலும், இண்டர்வலுக்கு அப்புறம் படம் வேற லெவலுக்கு சென்றிருக்கிறது. செண்டிமெண்ட், யதார்த்த வாழ்க்கை பாடங்கள், பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை எல்லாம் இயல்பாக, பிரசங்கம் இல்லாம சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக சரவணன் ஆசிரியர் ரோல் மனசுல பதியுது. ஷான் ரோல்டனின் BGM வேறலெவல். ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு கண்களுக்கு இனிமை. எடிட்டிங் இரண்டாம் பாதியை வேகமா, தடையில்லாம ஓட வைக்குது. சத்தமில்லாத காதல், நினைவுகளோடு வாழ்க்கைய பத்தி சின்ன சிந்தனை, இதுதான் இந்தப்படத்தோட ஸ்பெஷாலிட்டி

44
வித் லவ் படத்தின் வசூல்

ரிலீசுக்கு முன்பே பாசிடிவ் டாக் இருந்ததால் வித் லவ் திரைப்படம் முதல் நாளே அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி இருக்கிறது. இப்படம் உலகளவில் ஒரே நாளில் ரூ.1.75 கோடி வசூலித்து இருந்தது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.1.5 கோடி வசூலித்திருக்கிறது வித் லவ். அறிமுக நடிகரின் படம் இந்த அளவுக்கு வசூலித்துள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் எந்த படமும் இல்லாததால், வித் லவ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிங்கம் போல் சிங்கிளாக வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories