அய்யனார் துணை சீரியலில் வானதி மாறி மாறி பாண்டியனுக்கு போன் போட்டதால் கடுப்பாகும் சோழன், போனை தூக்கி கீழே போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியனின் ஒர்க் ஷாப்பிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் வானதி, தன்னுடைய பெற்றோர், உன்னை புகழ்ந்து பேசியதாக பாண்டியனிடம் கூறுகிறார். அவர் பேசுவதைப் பார்த்தால், கல்யாணத்துக்கு நாளே குறிச்சிருவாங்க போல என வானதி சொல்ல, அதற்கு கவுண்டர் போடும் பாண்டியன், உன்னை கட்டிக் கொடுத்தா அவங்களுக்கு ஒரு தொல்லை ஓஞ்சது. அடுத்து நான் தான அவஸ்தப்படுவேன் என சொல்ல, ஏன் பாண்டி அப்படி சொல்ற, உன்னை பாக்குறதுக்காக ஆசை, ஆசையாய் வந்தேன்ல என்னை சொல்லனும் என கோபித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார்.
25
நிலாவிடம் பேசும் ராகவ்
மறுபுறம் ஆபிஸில் ராகவ்வுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார் நிலா. அதன் பின்னர் ரூமில் இருந்து வெளியே வரும் ராகவ், தான் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். எங்கயாச்சும் கூப்பிட்டால் மேடம் வரமாட்டீங்க, ரொம்ப பிகு பண்ணுவீங்க. அதான் எல்லாரையும் போக சொல்லிட்டு உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் என சொல்கிறார் ராகவ். ஆனால் அவர் அருகில் வந்து அமர்ந்ததால் பதற்றமடையும் நிலா, எதுவாக இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம், இப்போ நான் கிளம்பனும் என சொல்கிறார். பின்னர் அவரிடம் கெஞ்சி கூத்தாடி அமர வைக்கிறார் ராகவ்.
35
உண்மையை உலறும் ராகவ்
அப்போது நிலாவிடம், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என ராகவ சொல்ல, இப்படியெல்லாம் பேசாதீங்க ராகவ் என நிலா கூறுகிறார். ஏன் நிலா, பிடிச்ச பொண்ணுகிட்ட பிடிச்சிருக்குனு சொல்லக்கூடாதா என கேட்கிறார் ராகவ். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு நான் சொல்லிட்டேன்ல, இப்ப வந்து இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க என நிலா கேட்க, நீங்க சொன்னா அது உண்மை ஆகிடுமா என ராகவ் பதிலுக்கு கேள்வி எழுப்ப, ஆமா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, சோழன் தான் என்னோட கணவர் என சொல்கிறார் நிலா. உங்களோட கதையெல்லாம், எனக்கு நல்லாவே தெரியும், இன்னைக்கு ஓட்டலில் சேரனை சந்தித்தபோது அவர் எல்லாத்தையும் சொல்லிட்டார் என கூறுகிறார் ராகவ்.
உங்க வாழ்க்கையில என்ன நடந்துச்சுங்குற மொத்த கதையும் எனக்கு தெரியும். நீங்க பண்ணுனது டிராமா கல்யாணம். இப்போ நீங்க டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்குறது வரை எனக்கு தெரியும் என சொல்கிறார் ராகவ். அதுமட்டுமின்றி நீ இனிமே அந்த வீட்ல இருக்க வேண்டாம். உனக்கு நல்ல பிளாட்டா நான் பாக்குறேன் என ராகவ் சொல்ல, அதைக்கேட்டு கடுப்பாகும் நிலா, என்ன விட்டா பேசிட்டே போறீங்க. எனக்கு வீடு பார்க்க நீங்க யாரு. எதுக்கு என்னோட பர்சனல் விஷயத்துல நீங்க தலையிடுறீங்க என கேட்டுவிட்டு கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார் நிலா. ராகவ் தடுக்க பார்த்தும் அவர் கிளம்பிச் செல்கிறார்.
55
பாண்டியன் - சோழன் இடையே மோதல்
மறுபுறம் வீட்டில் இருக்கும் பாண்டியனுக்கு வானதி போன் போடுகிறார். அதை அவர் எடுக்காமல் இருக்க, சோழன் எடுத்து பேசச் சொல்கிறார். போனை எடுத்தா சண்டை போடுவா எதுக்கு வேண்டாம் விடு என சொல்கிறார் பாண்டியன். வானதி திரும்பி திரும்பி போன் போட்டுக் கொண்டே இருந்ததால் கடுப்பாகும் சோழன், போனை தூக்கி கீழே போடுகிறார். இதனால் கடுப்பாகும் பாண்டியன், நீ எழுந்து வெளிய போடா என சோழனை சொல்ல, அவர் பாண்டியனின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அப்போது வானதி வீட்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்து டென்ஷன் ஆன சோழன், உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா, எப்பப் பார்த்தாலும் அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க என திட்டுகிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.