Aamir Khan : சம்பளமும் கேட்கல, கதையும் கேட்கல; ரஜினிக்காக நடிக்க ஒத்துக்கிட்டேன் – கூலி பற்றி பேசிய அமீர் கான்!

Published : Aug 03, 2025, 10:51 AM IST

Coolie Audio Launch in Tamil : கூலி படத்தின் கதை மற்றும் சம்பளம் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை என்று பாலிவுட் நடிகர் அமீர் கான் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

PREV
15
சம்பளமும் கேட்கல, கதையும் கேட்கல; ரஜினிக்காக நடிக்க ஒத்துக்கிட்டேன் – கூலி பற்றி பேசிய அமீர் கான்!

Coolie Audio Launch in Tamil : ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் கூலி. இளம் மற்றும் துடிப்பான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ஷோபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸி, சார்லி, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

25
சம்பளமும் கேட்கல, கதையும் கேட்கல; ரஜினிக்காக நடிக்க ஒத்துக்கிட்டேன் :அமீர் கான்!

ஏற்கனவே படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

35
கூலி இசை வெளியீட்டு விழா

இதில் அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கலாநிதி மாறன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

45
கூலி பற்றி பேசிய அமீர் கான்!

ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி படிஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதற்கு முன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதனை பார்க்கும் போது படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும்.

55
கூலி இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

அப்போது பேசிய அமீர் கான், இந்தப் படத்தை தேர்வு செய்ய ஒரே ஒரு காரணம் ரஜினிகாந்த் மட்டுமே. எனக்கு ரஜினிகாந்தின் சிரிப்பு, கண் ரொம்பவே பிடிக்கும். நான் சம்பளமும் கேட்கவில்லை, படத்தின் கதையும் கேட்கவில்லை. மேலும் படத்தில் நடிப்பதற்கான தேதியும் கேட்கவில்லை. மேலும், நான் கேட்டது ஒன்னே ஒன்னு தான். ஷூட் எப்போது, நான் எப்போது நடிக்க வரவேண்டும் என்பது தான் என்று கூறியிருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories