MS Bhaskar new Movie Grand Father Title Look and Poster Released : நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தேசிய விருது வென்ற எம்எஸ் பாஸ்கருக்கு டிரீட் கொடுத்த ஃகிராண்ட் ஃபாதர் மூவி டீம் – ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி முத்திரை பதித்துக் கொண்டவர் தான் எம் எஸ் பாஸ்கர். எந்த ரோல் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டக் கூடியவர். காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என்று எத்தனையோ அவதாரங்களை ஏற்று நடித்துள்ளார். தற்போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
ஃபார்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் வகையில் கிராண்ட் ஃபாதர் GRAND FATHER படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி நடிக்கும் கிராண்ட் ஃபாதர் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
23
ஃகிராண்ட் ஃபாதர் மூவி டீம் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிகராக பல படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கும் நிலையில் இப்போது இயகுநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அப்படி அவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கிராண்ட் ஃபாதர்' (GRAND FATHER). இந்தப் படத்தில் ஃப்ராங்க் ஸ்டார் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் தவிர ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
33
ஸ்ரீதர் ஒளிப்பதிவு, ரஞ்சின் ராஜ் இசை
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார். ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். காமெடி மற்றும் ஹாரர் ஃபேண்டஸி படமாக இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கிராண்ட் ஃபாதர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. போஸ்டரை பார்க்கும் போது அவர் முற்றிலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.