கூலி ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசியது என்ன? சூப்பர்ஸ்டாரின் ஃபுல் ஸ்பீச் இதோ

Published : Aug 02, 2025, 10:04 PM IST

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது, இதில் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Rajinikanth Speech in Coolie Audio Launch :

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கலாநிதி மாறன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இறுதியாக பேச வந்தார். அப்போது அவர் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
ரஜினி பேசியது என்ன?

ரஜினிகாந்த் மேடையேறி பேச வந்ததும் அரங்கம் அதிர விசில் சத்தம் பறந்தது. இதையடுத்து என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே என தன்னுடைய சிக்னேச்சர் டயலாக் உடன் பேசத் தொடங்கிய ரஜினிகாந்த், தான் 38 ஆண்டுகளுக்கு பின் சத்யராஜ் உடன் இணைந்து பணியாற்றியது பற்றி பேசி இருக்கிறார். அதன்படி, எனக்கு சத்யராஜ் உடன் கருத்து ரீதியாக முரண்பாடு இருக்கலாம் ஆனால் மனசுல பட்டத சொல்லிட்டு போயிடுவாரு. மனசுல பட்டத சொல்றவங்கள நம்பலாம். ஆனா உள்ளயே வச்சிட்டு இருக்கவங்கள நம்ப முடியாது என கூறினார்.

34
லோகேஷை கலாய்த்த ரஜினி

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுகையில், இந்த கூலி படத்துடைய உண்மையான ஹீரோ வேறுயாருமில்லை லோகேஷ் கனகராஜ் தான். இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு வானுயர இருக்கிறது. சக்சஸ்ஃபுல் ஆன கமர்ஷியல் இயக்குனர் என்னுடன் இணைகிறார். அதுவும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த காம்போவே புயலை கிளப்பும். சமீபத்துல லோகேஷ் 2 மணிநேரத்துக்கு ஒரு இண்டர்வியூ கொடுத்தாங்க. நா உட்கார்ந்து பார்த்தேன் அது முடியல. அப்புறம் படுத்துக்கிட்டே பார்த்தேன் முடியல. பின்னர் தூங்கி எழுந்து பார்த்தேன் அப்பவும் முடியல என லோகியை பங்கமாக கலாய்த்துள்ளார் ரஜினி.

44
நாகர்ஜுனாவுக்கு பாராட்டு

அடுத்ததாக நடிகர் நாகர்ஜுனா பற்றி பேசுகையில், நாகர்ஜுனா இந்த வயசுலையும் என்ன ஒரு கலராக இருக்கிறார். எனக்கு முடியெல்லாம் போயிடுச்சு. ஆனா உங்களோட பிட்னஸின் ரகசியம் என்ன என கேட்டேன். அதற்கு அவர், ஒன்னுமே இல்ல சார், உடற்பயிற்சி மட்டும் தான் காரணம்னு சொல்லிட்டார். அஜித்தின் மங்காத்தா படத்துல வெங்கட் பிரபு ஒரு டயலாக் வச்சிருப்பார். நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறதுனு. அதற்கு ஏற்றார்போல் நாகர்ஜுனா நெகடிவ் ரோலில் அருமையாக நடித்திருக்கிறார்.

பழச மறக்காத ரஜினி

நான் கண்டக்டரா இருக்கும்போது என்னோட நண்பன் அவனோட தங்க செயின கொடுத்து நீ சினிமால நடினு சொன்னான். அதனால தான் நான் இங்கே இருக்கிறேன் என்று தன் நண்பர் ராஜ் பஹதூர் பற்றி பெருமிதத்துடன் கூலி ஆடியோ லாஞ்சில் பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினி அட்வைஸ்

தொடர்ந்து பேசிய ரஜினி, உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு. அதுதான் இறைவனின் குரல். இறைவனின் குரலையும், உங்களின் குரலையும் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு பணம், புகழ் வந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கெளரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை என ரஜினிகாந்த் அறிவுரை கூறி இருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories