ஜெயிலரில் ரஜினி ரெக்கார்டு மேக்கர்; கூலியில் அவர் ரெக்கார்டு பிரேக்கர்! சூப்பர்ஸ்டாரைப் பற்றி சூளுரைத்த கலாநிதி

Published : Aug 02, 2025, 10:27 PM IST

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

PREV
13
Kalanithi Maran Speech

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான், நடிகை ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. இந்த ஆடியோ லாஞ்சில் ரஜினியின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்களோ அதே அளவு ஆர்வத்துடன் கலாநிதி மாறனின் பேச்சையும் கேட்டு ரசித்தனர். அப்படி அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

23
கலாநிதி மாறன் பேசியது என்ன?

கலாநிதி மாறன் பேசியதாவது : “நடிகர் நாகர்ஜுனா என்னிடம் ரஜினிகாந்த் தான் ஒரிஜினல் சூப்பர்ஸ்டார் என சொன்னார். ஆனால் நான் சொன்னேன், ரஜினி ஒரிஜினல் சூப்பர்ஸ்டார் மட்டுமில்ல, ஒரே ஒரு சூப்பர்ஸ்டாரும் அவர் தான். இன்றைக்கு ரஜினிகாந்த் போனில் அழைத்தால் இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சரும் எடுப்பார். ஏன் பிரதமர் கூட ரஜினி போன் போட்டால் உடனே எடுப்பார். அவர் தான் ரியல் சூப்பர்ஸ்டார்.

33
கூலி ரெக்கார்டு பிரேக்கர்

இந்த 50 ஆண்டுகளில் நிறைய பேர் வந்தார்கள்... சென்றார்கள். ஆனால் ரஜினிதான் சூப்பர்ஸ்டாராக நிலைத்திருக்கிறார். ஜெயிலரில் ரஜினிகாந்த் ரெக்கார்டு மேக்கராக இருந்தார். கூலியில் ரெக்கார்டு பிரேக்கராக இருப்பார் என்று கலாநிதி மாறன் சொன்னதும் அரங்கம் அதிர விசில் சத்தம் பறந்தது. முன்னதாக ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிலும் இதேபோன்று தான் கலாநிதி மாறன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories