இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தலைவர் நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் தான் 'கூலி'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது கிட்ட தட்ட படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கூலி படத்தில் நடிக்கும் பிரபலங்கள்
குறிப்பாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, கட்டப்பா சத்யராஜ், கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய , அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்த், சன் பிச்சர்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளதால், இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு மட்டுமே ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் 50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சரவெடியாய் ரெடியான ரஜினிகாந்தின் கூலி டீசர்; எப்போ ரிலீஸ் தெரியுமா?
ஜெயிலர் படம் போல் ஆகஸ்ட்டை குறிவைக்கும் கூலி
தற்போது வரை ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்தது போல் இந்த படத்தையும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யலாம் என கூறியுள்ளாராம். இதற்க்கு படக்குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் அடிக்கடி இந்த படம் குறித்த ஏதேனும் அப்டேட்ஸ் வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் சிக்கிடி சிக் பாடல் புரோமோ வெளியானது.
அமீர்கானின் லுக்
மேலும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம், பூஜே ஹெக்டே இந்த படத்தில் ஆட்டம் போட்டுள்ள பாடலின் டீஸர் அல்லது படத்தின் டீசர் வெளியாகும் என காத்திருந்த நிலையில் தலைவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இன்று அமீர் காணும் தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அமீர் கானின் கூலி பட லுக்கை வெளிப்படுத்தும் விதமாக லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங் ஸ்பாட்டில் அமீர் கானுடன் நடந்த டிஸ்கஷனில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்கே, விஜய்க்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்!