தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அவருக்கு 42 வயது ஆனபோதிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். இந்த வயதிலும் இளமையோடு காட்சியளிப்பதால் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் திரிஷா தான். இவருக்கு ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
24
திரிஷா கைவசம் உள்ள படங்கள்
நடிகை திரிஷா நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் விஸ்வம்பரா என்கிற படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா, இதுபோக மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் திரிஷா.
34
திரிஷா பெயரில் உள்ள ஊர்
இந்நிலையில், நடிகை திரிஷா பெயரில் உள்ள ஊர் ஒன்றை அவரது ரசிகர் கண்டுபிடித்து இருக்கிறார். அந்த ஊரின் பெயர் பலகை முன் நின்று வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் அந்த ரசிகர் பதிவிட்டிருந்த நிலையில், அதை நடிகை திரிஷாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ஆச்சர்யத்துடன் பதிவிட்டு இருந்தார். அந்த ஊர் பெயர் ‘Vijayak Trisha'. அந்த ஊர் லடாக்கில் உள்ள நுப்ரா வேலியில் இருந்து உலகத்தின் உயரமான பேஸ் கேம்ப் என அழைக்கப்படும் சியாச்சின் பேஸ் கேம்புக்கு செல்லும் வழியில் உள்ளதாம்.
நடிகைகள் பெயரில் கோவில்கள் கட்டி பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு நடிகையின் பெயரில் ஒரு ஊரே உள்ள தகவலை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். சிலரோ அந்த ஊர் பெயரில் விஜய் (vijay), அஜித் குமார் (AK) பெயரும் இருப்பதாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ நடிகை திரிஷாவை அந்த ஊருக்கு விசிட் அடிக்குமாறு கூறி வருகின்றனர். நடிகை திரிஷா அந்த ரீல்ஸ் வீடியோவுக்கு லைக் செய்து இருக்கிறார். அதனால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.