விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கு பில்டப் செய்வதற்காக கிடைத்தது, கிடைக்கவில்லை. வரும், வராது என்கிறார்கள். அப்படியே தொண்டர்களை கொதிநிலையில் வைப்பதற்காக இப்படி செய்கிறார்கள்.
ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் சென்சார் போர்டு அனுமதி கிடைப்பதில் தாமதமாகி இருக்கிறது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவும், விஜயும் சேர்ந்து நடத்தும் நாடகம் எனத் தெரிவித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அவரது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி தாமதப்படுத்துவதும் பாஜகவின் மறைமுக அழுத்தமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ‘‘அரசியல் கேள்விகளை சபாநாயகரிடம் கேட்பது நியாயமா? கரூரில் 41 பேர் இறந்ததில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்திருந்தார்கள்.
24
அந்த வசனத்தை விஜய் பயன்படுத்துவாரா..?
விசாரணைக்கு அழைக்கும் முன்பே தம்பி விஜய், ‘நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்’’ என்று விதாண்டவம் செய்தார். அவர் மீது எஃப்ஐஆர் போடவில்லை, வழக்கு பதிவு செய்யவில்லை, விசாரணைக்கு அழைக்கவில்லை. அப்படி இருக்கும்போது அந்த வசனத்தை பயன்படுத்தியவர்கள் இப்போது சிபிஐ 12ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இப்போது அந்த வசனத்தை விஜய் பயன்படுத்தினாரா?
பாரதிய ஜனதா கட்சியும், அவர்களும் இணைந்து நாடகம் ஆடுகிறார்களா என்பது தெரியவில்லை . ஆதவ் அர்ஜுனா தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேட்டார். கேட்டாலே பாரதிய ஜனதா கட்சியிடம் நியாயம் கிடைக்கும், நல்லது கிடைக்கும், அவர்கள் நம்மை பாதுகாப்பார்கள் என நினைக்கும் தவெகவினர் இப்போதும் கேட்டிருக்கலாம் இல்லையா? ஆந்திராவில் ஒரு நடிகர் சினிமா பார்க்க போன இடத்தில் ஒரு அம்மா கூட்டத்தில் இருந்து விட்டார். அதற்காக அந்த நடிகரை கைது செய்தார்கள். 41 பேர் இறந்ததற்கு சட்டம் கடமையை செய்திருக்க முடியும்.
34
மத்திய அரசா? மாநில அரசா?
தமிழக அரசு மீது விசாரணை அமைப்புகள் அவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கிறது என தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் விசாரணை கேட்டார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சிபிஐ விசாரணை நடக்கிறது. பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் கேள்விகளை கேட்கிறீர்கள்? இது நாடகமா என்று கேட்கிறீர்கள். பாரதிய ஜனதா கட்சியும், விஜய்யும் நாடகமா என கேட்கிறார்கள். ஒருவேளை விஜய் விரும்பி கேட்பதால் அப்படி சொல்கிறார்களா? என்று தெரியவில்லை. தணிக்கை செய்து செய்து அந்த அனுமதி கொடுப்பது யார்? மத்திய அரசா? மாநில அரசா? மத்திய அரசுதான்.
அதையும் என்ன சொல்கிறார்கள் என்றால், அது விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கு பில்டப் செய்வதற்காக கிடைத்தது, கிடைக்கவில்லை. வரும், வராது என்கிறார்கள். அப்படியே தொண்டர்களை கொதிநிலையில் வைப்பதற்காக இப்படி செய்கிறார்கள். சினிமா படம் என்று சொன்னாலே அந்த படத்தின் இயக்குனர், பட தயாரிப்பாளர் நிறைய படங்களை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும், எப்படி சென்சார் அனுமதி வாங்க வேண்டும், எவ்வளவு காலமாகும் என்பது. ஒன்பதாம் தேதி நாங்கள் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டு விட்டு எட்டாம் தேதி போய் யாரும் நிற்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஏன் இவ்வளவு குறுகிய காலத்தில் போய் நிற்க வேண்டும்? இது பாஜகவும், விஜயும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்கிறார்கள்’’எனக் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.