விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன் - மயில் திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தனது மகளின் வாழ்க்கைக்காக அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி திருமணம் செய்து வைத்த மயில் அம்மாவின் சதிவலை தற்போது அவர் கழுத்தையே சுற்றியுள்ளது.
25
கதைக்களம்: பொய்களும் போலீஸ் புகாரும்
சரவணன் திருமணத்திற்காக மயில் அம்மா சொன்ன பொய்கள் ஒவ்வொன்றாக அம்பலமானதை அடுத்து, மயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மயில் அம்மா, பாண்டியன் குடும்பத்தினரை பழிவாங்கத் துடித்தார். பாண்டியன் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து, அவர்களை சிறைக்கும் அனுப்பினார். இருப்பினும், கோமதியின் அண்ணன்கள் அளித்த உண்மையான வாக்குமூலத்தால் பாண்டியன் மற்றும் அவரது மகன்கள் தற்காலிகமாக இந்தச் சிக்கலில் இருந்து வெளியே வந்தனர்.
35
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்!
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அடுத்தடுத்த எபிசோடுகளில் மயில் அம்மாவிற்கு அவர் செய்த வினையே பலனாகத் திரும்பப் போகிறது. பாண்டியன் குடும்பத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் ஒருபுறம் ஒளிபரப்பாகி வரும் வேளையில், மயில் அம்மாவின் உண்மை முகம் அம்பலமாகிறது.
இந்தத் தொடரில் மயிலின் அப்பாவாக நடிக்கும் சைவம் ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், பாண்டியன் குடும்பத்தின் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மா சிறையில் (Jail) அடைக்கப்பட்டுள்ளார். அவர் கம்பி எண்ணும் காட்சிகள் படமாக்கப்படுவதை அந்தப் புகைப்படம் உறுதி செய்துள்ளது.இதன் மூலம், தர்மத்திற்கு மாறாகச் செயல்பட்ட மயில் அம்மாவுக்குத் தக்க தண்டனை கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
55
அடுத்தது என்ன?
மயில் அம்மா சிறைக்குச் சென்ற பிறகு, மயில் மற்றும் அவரது தந்தையின் நிலை என்னவாகும்? பாண்டியன் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்ன அதிரடி முடிவு எடுப்பார்? சரவணன் - மயில் வாழ்க்கை மீண்டும் இணையுமா? போன்ற பல கேள்விகளுடன் சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.