நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக, சினிமாவை விட்டு விலக இருந்த நேரத்தில் அவரை மீட்டுக் கொண்டு வந்த 5 விஷயங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
சமந்தா ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில், சென்னை பல்லாவரத்தில் பிறந்த பெண். இவர் தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்ள பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. கல்லூரி படிக்கும் போதே வாய்ப்புக்காக பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கிய இவருக்கு ஆரம்பத்தில் ரிச் கேர்ள்ஸ் எனப்படும் ஹீரோயின்களின் தோழி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சமந்தா அப்படி பட்ட ரோல்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த படங்களில், அவருடைய முகம் கூட ஸ்கிரீனில் தெரியாது என்பது தான் வேதனை.
212
Samantha First Movie in Maniratnam Direction
சிறந்த படத்தில் தான் தன்னுடைய அறிமுகம் இருக்க வேண்டும் என எண்ணிய சமந்தாவுக்கு, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக 'கடல்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கிட்டத்தட்ட 15 நாள் சமந்தாவை வைத்து படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம், திடீரென சமந்தாவுக்கு ஏற்பட்ட சரும பிரச்சனை காரணமாக அவரின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், சமந்தாவை இப்படத்தில் இருந்து நீக்கினார்.
312
Gautam Menon Direction
பல வருடமாக வாய்ப்பு தேடிய சமந்தாவுக்கு, இப்படம் கையில் கிடைத்தும் நழுவியது பேரிடியாக அமைந்தது. எனினும் விடாமுயற்சியோடு மீண்டும் தன்னுடைய பட தேடுதலை தொடர்ந்தார். அப்போதுதான் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், தெலுங்கில் வெளியான 'ஏ மாயா சேசாவா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பற்றினார். மணிரத்தினம் இயக்கிய கடல் படம் அப்போது தோல்வியை சந்தித்த நிலையில், சமந்தாவின் 'ஏ மாயா சேசாவா' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் இப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்கிற பெயரில் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தினாலும், தமிழிலும் முன்னணி நடிகை எங்கிற இடத்தை பிடித்தார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
512
Samantha - Naga Chaitanya Wedding
சமந்தா ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்த நடிகையாக மாறியவர். அவரை தெலுங்கு திரையுலகின் இளவரசராக இருக்கும் சைதன்யா திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் அவ்வளவு எளிதில், பிற மொழியை சேர்ந்த நடிகைகளை தங்களுடைய குடும்பத்திற்குள்ளே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் சைதன்யாவின் ஆழமான காதல்தான் சமந்தா சுமார் 3,000 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள காரணம் என கூறப்பட்டது.
திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, நாக சைதயாவையே மிஞ்சும் அளவில் தன்னுடைய கெரியரில் உயர்ந்தார். இது சைதன்யாவுக்கு ஒருவித ஈகோவை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு சில காரணங்களால் சமந்தா- சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. அந்த சமயத்தில் சைத்தாயா குடும்பத்தினர் சமந்தாவுக்கு 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்த போதும், தனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் என நிராகரித்தார்.
712
Samantha Affected Myositis
நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா தன்னுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்திய போது தான், ஆட்டோ இம்யூன் எனப்படும் மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் எழுந்து கூட நிற்க முடியாத அளவுக்கு சமந்தாவின் உடல்நிலை மாறியது. இதற்காக பல்வேறு மருந்துகள் எடுத்து கொண்டதால், சமந்தாவின் உடலிலும், முகத்திலும், அதன் பின்விளைவுகள் பிரதிபலிக்க தொடங்கியது.
வாழ்க்கை முழுவதும் இந்த பிரச்சனையால் போராட வேண்டும் என்பது சமந்தாவின் விதியாக மாறிய நிலையில்,தன்னுடைய வலி- வேதனையின் காரணமாக திரையுலகை விட்டு விலகி விடலாம் என முடிவு செய்தார் சமந்தா. காரணம் மயோசிட்டிஸ் பிரச்சனையால், ஒரு நாள் நன்றாக அவரின் உடல்நிலை நன்றாக இருந்தாலும் மறுநாள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் இவரின் முகத்திலும் அது பிரதிபலிக்கும். ஒரு நடிகைக்கு முகம் என்பது மிகவும் முக்கியம் என்பதால் தான்.
912
Samantha Followed 5 things in Daily Life:
பின்னர் திடீர் என தன்னுடைய மனதை மாற்றி கொண்ட சமந்தா, தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகளை முறியடிக்க முடியும் என தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் 5 விஷயங்களை கடைபிடிப்பதன் மீண்டும்... மயோசிட்டிசில் இருந்து மீண்டு வந்தார்.
'மெடிடேஷன்' தினமும் தியானம் செய்வது, சமந்தாவின் உடலையம் - மனதையும் நடுநிலையாக வைத்து கொள்ள உதவியது. அப்படியே ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தினார். இது அவரை மிகவும் பாசிட்டிவாக உணர வைத்தது.
1112
Love pets and Yoga
நாய்கள் - பூனைகள் வளர்ப்பு. வீட்டில் செல்லப்பிராணிகள் மீது சமந்தா அன்பு காட்டும் பொது இனம் புரியாத மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார். சென்னை பிராணிகளை தன்னுடைய குழந்தையாகவே கருது அவர் வளர்த்து வருகிறார். இதை தொடர்ந்து தினமும் யோகா செய்வது இவருடைய மன உறுதியும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக நம்புகிறார்.
1212
Gardening and Gym Workout
கார்டனிங், செடிகள் வளர்ப்பதன் மூலம் சமந்தாவின் மனம் சந்தோஷம் அடைகிறது. தன்னுடைய வீட்டில் தோட்டத்திலும், மாடியிலும் ஏராளமான செடிகளை சமந்தா வளர்த்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், செடிகளை பராமரிப்பது இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அதே போல் ஜிம்மி உடற்பயிற்சி செய்வதையும் சமந்தா விரும்புகிறார். தன்னுடைய வீட்டிலேயே ஜிம்மை வைத்திருக்கும் சமந்தா தினமும் 3 மணிநேரமாவது வீட்டில் இருக்கும் போது உடல்பயிற்சி செய்கிறார். இப்படி பிடித்த விஷயங்களால், மிக விரைவாகவே மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டும் நடிக்கவும் துவங்கினார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்து.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.