சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வேலையை விட்ட நடிகர்கள்..

First Published | Aug 15, 2024, 12:58 PM IST

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுக்காக தங்களின் கௌரவமான அரசு வேலைகளை விட்டு வந்த நடிகர்கள் பலர். இந்த பதிவில் போலீஸ் வேலையை விட்டு சினிமாவில் பிரபலமான நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

Actor

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வேலையை விட்டு நடிகரான பலர் இருக்கின்றனர். அந்த வகியில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வேலையை விட்ட நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Siva karthikeyan

சின்னத்திரையில் இருந்து தனது கெரியரை தொடங்கிய சிவார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறி உள்ளார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார். சிவகார்த்திகேயனினி தந்தை ஒரு போலீஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இறந்த பின்பு வாரிசு அடிப்படையில் சிவகார்த்திகேயனுக்கு அந்த வேலை வந்துள்ளது. ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் தன் அப்பா பார்த்த போலீஸ் வேலையை வேண்டாம் என்று தவிர்த்தார்.

Tap to resize

Jaibhim Actor Thamizh

தமிழ் :
ஜெய்பீம் படத்தில் குருமூர்த்தி என்ற சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் மிரட்டியவர் தமிழ். இந்த படத்தின் பிரபலமான இவர் 12 ஆண்டுகள் போலீஸாக பணியாற்றி உள்ளார். சிறு வயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவர் போலீஸ் வேலையை விட்டு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். மேலும் அசுரன் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். டாணாக்காரன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.. 
 

Delhi Ganesh

டெல்லி கணேஷ் :

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் டெல்லி கணேஷ். இவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் நடிகராக மாறுவதற்கு முன்பு டெல்லி கணேஷ் இந்திய விமான படையில் பணியில் இருந்தார். 1964 முதல் 1974 வரை 10 ஆண்டுகள் விமான படையில் பணியாற்றிய அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக அந்த வேலையை விட்டு விலகினார்.

Vinu Chakravarthy

வினு சக்ரவர்த்தி :

பழம் பெரும் நடிகரும் இயக்குனருமான வினு சக்ரவர்த்தி 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காமெடி, குணச்சித்திர நடிகர், வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்தலாக நடிப்பவர் வினு சக்ரவர்த்தி. ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்பு சென்னை ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். பின்னர் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய அவர் நடிக்க வேண்டும் என்பதற்காக வேலையை விட்டுவிட்டார். 
 

Naasar

நாசர்

நடிகர், இயக்குனர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நாசார். தமிழ், தெலுங்கில் மட்டும் 550க்கும் மேற்பட்ட படங்களில் நாசர் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் நாசர் சிறிது காலம் இந்திய விமானப் படையில் பணியாற்றினார். அதன் பின்னர் தமிழ்நாடு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பயின்று நடிகராக மாறினார். 

Latest Videos

click me!