Samantha Ruth Prabhu Films
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவிற்கு தெலுங்கு சினிமா மற்றும் தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். அங்கு ஒரு சில வெப் சீரிஸிலில் நடித்து வருகிறார்.
Samantha Ruth Prabhu
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தாலும் அவரை நடிகையாக அறிமுகம் செய்தது பானா காத்தாடி படம். அதன் பிறகு நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, மெர்சல், காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
Actress Samantha
இதில், ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. மற்ற படங்கள் தோல்வி கொடுக்க தமிழில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவை விட தமிழ் சினிமாவில் தான் அதிக படங்களில் நடித்திருந்தார்.
Samantha
இந்த நிலையில் தான் தெலுங்கு சினிமாவிற்கு சமந்தா குட்பை சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு 2 காரணம சொல்லப்படுகிறது. ஒன்று தெலுங்கு சினிமாவில் போதுமான வாய்ப்பு இல்லை. மற்றொன்று நாக சைதன்யாவின் 2ஆவது திருமணம்.
samantha, naga chaitanya
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் தான் 3 ஆண்டுகளுக்கு பிறகு நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
Samantha Filmography
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது குறித்து சமந்தா எந்த பதிவும் பதிவிடவில்லை. வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. தற்போது வரை சைலண்டாக இருந்து வருகிறார்.
Samanatha Tamil Movies
இந்த நிலையில் தான் சமந்தா தெலுங்கு சினிமாவிற்கு குட் பை சொல்ல இதுவரும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் மும்பையில் சில ஆண்டுகள் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, பாலிவுட்டில் வெப் சீரிஸிலும் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
Samantha
தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் சமந்தாவிற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.