5. ஹாஃப் பேன்ட்ஸ் ஃபுல் பேன்ட்ஸ்
இணையமும் மொபைல் போன்களும் இல்லாத காலத்தில் ஒரு சிறுவனின் கற்பனை, குறும்பு, சாகசம் மற்றும் குழந்தைப் பருவ உலகத்தை அழகாகப் பதிவு செய்யும் சீரிஸ் இது. தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரப் பின்னணியில், குடும்பத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் சிறுவனின் பார்வையில் கதை நகர்கிறது.
குழந்தைகளின் உலகத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், பெரியவர்கள் பார்க்கும்போது தங்களுடைய சொந்த childhood memories-ஐ நினைவுபடுத்தும் பல தருணங்கள் இருக்கும். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கும்போது, குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி பேச வைக்கும் ஒரு அழகான நாஸ்டால்ஜியா சீரிஸ்.
இந்த 5 சீரிஸ்களிலும் என்ன ஸ்பெஷல்?
இந்தப் பட்டியலில் இருக்கும் சீரிஸ்கள் அனைத்துமே பெரிய ஆக்ஷன், வன்முறை அல்லது பரபரப்பான திருப்பங்களை நம்பி உருவாக்கப்பட்டவை அல்ல. குடும்பம், பாசம், குழந்தைப் பருவம், வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்கள் ஆகியவற்றைத்தான் மையமாகக் கொண்டிருக்கின்றன.
அதனால், இந்த வீக்கெண்டில் தனியாக OTT-யில் ஏதாவது பார்ப்பதற்குப் பதிலாக, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து ஒரு நல்ல சீரிஸை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், இந்த 5 படைப்புகளையும் உங்கள் வாட்ச் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Family Time : இந்த 5 படங்களை இன்னும் பார்க்கலையா? குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க செம சாய்ஸ்!