நேற்று இது தொடர்பான பிரஸ் மீட்டில் பேசிய வனிதா, நானும் பவர் ஸ்டார் சீனிவாசனும், மணமகன் மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்தான் அது. அதைத்தான் நான் வெளியிட்டேன். ஆனால் இது எனது அடுத்த திருமணம் என பலரும் விமர்சித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்களைப் பார்த்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கூட என்ன இது? என எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளதாக கேள்விப்பட்டேன். சக நடிகர், நடிகைகள் திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டால், அது வேலை விஷயமாக இருக்க கூடாதா? என வறுத்தெடுத்தார். என் சொந்த வாழ்க்கையில் நான் நான்கு திருமணம் அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது எனது சொந்த விருப்பம் என காரசாரமாக பதிலடி கொடுத்தார்.