4 மாதத்தில் 4 பிரம்மாண்ட படங்களுடன் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் கோலிவுட்!

Published : Mar 16, 2025, 11:06 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒரு பிரம்மாண்ட படம் மட்டுமே வெளியான நிலையில், அடுத்த நான்கு மாதங்கள் 4 மாஸ் நடிகர்களின் படங்கள் வரிசைகட்டி வருகின்றன.

PREV
15
4 மாதத்தில் 4 பிரம்மாண்ட படங்களுடன் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் கோலிவுட்!

Upcoming Biggies in Tamil Cinema 2025 : 2025-ம் ஆண்டில் தமிழ் சினிமா பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை தெலுங்கு, இந்தி திரையுலகம் அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் தமிழ் படங்களால் சோபிக்க முடியவில்லை. இந்தியில் விக்கி கெளஷல், ராஷ்மிகா நடித்த சாவா திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படமாகவும் சாவா உள்ளது. அடுத்ததாக தெலுங்கில் பொங்கல் விருந்தாக வெளிவந்த சங்கராந்திக்கு வஸ்துன்னாம் திரைப்படம் உள்ளது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.330 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அதே வேளையில் தமிழ் சினிமாவில் இது வரை ஒரு படம் கூட 150 கோடி வசூலை தாண்டவில்லை. இந்த நிலையை மாற்ற அடுத்த நான்கு மாதங்களில் 4 பிரம்மாண்ட படங்களை களமிறக்குகிறது கோலிவுட். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

25
வீர தீர சூரன் (Veera Dheera Sooran)

சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் பெரியளவில் வெற்றியை ருசிக்காததால், வீர தீர சூரன் படம் மூலம் விக்ரம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் ஜோடியாக துஷாராவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.

35
குட் பேட் அக்லி (Good Bad Ugly)

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடைசியாக அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், குட் பேட் அக்லி படம் மூலம் தரமான கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறாராம் அஜித். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... அடிச்சு நொறுக்கும் எனெர்ஜியில் ஆதிக்; தெறிக்க விட்ட அஜித்! 'குட் பேட் அக்லீ' மேக்கிங் வீடியோ!

45
ரெட்ரோ (retro)

நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா, கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. அந்த தோல்வியில் இருந்து மீள நடிகர் சூர்யா தேர்வு செய்துள்ள படம் தான் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

55
தக் லைஃப் (thug life)

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கிய இந்த பிரம்மாண்ட படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அந்த தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்க தக் லைஃப் படத்துடன் காத்திருக்கிறார் கமல். இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... Thug Life : கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா? உண்மை என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories