Breaking : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி; அப்பல்லோ மருத்துவனையில் அனுமதி

Published : Mar 16, 2025, 09:20 AM ISTUpdated : Mar 16, 2025, 09:34 AM IST

திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PREV
14
Breaking : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி; அப்பல்லோ மருத்துவனையில் அனுமதி
AR Rahman

AR Rahman Hospitalized : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்தும் வருகிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

24
AR Rahman

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரோஜா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ரோஜா படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இதையும் படியுங்கள்... ஒரே படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா! எல்லா பாட்டும் ஹிட்டு, அது என்ன படம்?

34
AR Rahman Hospitalized

ஏ.ஆர்.ரகுமான் இசையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய மனைவி சாயிரா பானுவை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து பிரிவுக்கு பின்னர் சாயிரா பானுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

44
AR Rahman Health

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பாடுள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு தற்போது 58 வயது ஆகிறது. இவருக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் இருக்கிறார். இந்தியா சார்பில் சிறந்த இசையமைப்பாளருக்காக ஆஸ்கர் விருது வாங்கிய முதல் நபர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மனைவி சாயிரா; ஓடோடி சென்று உதவிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Read more Photos on
click me!

Recommended Stories