மேலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் அவருடைய ரசிகர்கள் தற்பொழுது தொண்டர்களாக மாறியுள்ளனர். இது, அவருக்கு பெரிய ஆதரவாக இருக்கும். ஆனால், அவருடைய கட்சி மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, அவருடைய புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெளிவாக பரப்ப வேண்டும். ஒரு கட்சி வெற்றிபெறுவதை விட, அது மற்ற கட்சிகளை எதிர்த்துப் பேசவேண்டும். அது மக்களின் கவனத்தை அந்தக் கட்சியில் ஈர்க்க உதவும். விஜயின் அரசியல் பாதை சரியானது, ஆளும் கட்சியை விமர்சிக்காமல் எந்த கட்சியும் முன்னேற முடியாது. அதனால், விஜய் தெளிவாக இந்த முறையைச் சரியாகப் பின்பற்றுவதாக பேரரசு கூறியுள்ளார்.