
காவல் துறையில் ஏட்டையா என்னும் பதவியில் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபு, சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேலை பார்க்கிறார். இதில் ஒருமுறை 9 கொலை செய்த ஒருவன் விக்ரம் பிரபுவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய, தனது கையில் உள்ள துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிடுகிறார், அப்பொழுது விக்ரம் பிரபு போடப்படும் பிஜிஎம் அல்டிமேட் ஆக இருக்கும் சரியான சவுண்டு மற்றும் அதிர்வுகளுடன் அந்த பிஜிஎம் அமைந்திருப்பதால் திரையரங்குகளில் சரியான கைதட்டுகளை வாங்கி குவித்தது.அந்த கைதியும் இறந்துவிடுகிறான். இதனால் விக்ரம் பிரபு மீதும், அவருடன் சென்ற மற்ற இரு போலீசார் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்குப் பிறகு அவருக்கு ஒரு மனைவியும் அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் அந்த படத்தில் நடிக்கிறார் ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக காட்டப்படுகிறது.
அதற்கு பின்பு தன் நண்பன் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் அவருக்கு விடுமுறை வேண்டுமென்பதால் விக்ரம் பிரபு அதிகாரியிடம் போய் கேட்க அதிகாரி அவருக்கு பதில் நீ வேணா அந்த இடத்திற்கு செல் என்று விக்ரம் பிரபுவை கைதிகளை அழைத்துச் செல்வதற்கு அனுப்ப 5வருடங்களாக சிறையில் இருக்கும் அப்துல் ரஊப் என்பவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. விக்ரம் பிரபு மற்றும் இரண்டு போலீசார் இணைந்து அப்துலை அழைத்து செல்கிறார்கள். விக்ரம் பிரபு உடன் இரண்டு போலீசார்கள் உடன் வரும்போது இரண்டு போலீஸ்களும் தவறான செயல்கள் செய்வதன் மூலம் அவர் வந்த பேருந்தை விட்டு விடுகிறார்கள்அப்போது கைதியுடன் பேருந்து சென்றுவிட கைதியும் இறங்கி தப்பிக்க இரண்டு துப்பாக்கிகள் மற்றும் அவர்களுடைய பேக் உங்களுடன் இறங்கி தப்பிக்கும் போது இந்த பேரோட கைதியா நான் எப்படி வெளியில வாழுவேன் என்று இன்று கூறுவான்.
துப்பாக்கி மற்றும் பைகளுடன் அப்துல் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆகி விடுவான் அதன் பின்னர் இவர்களுக்கு தகவல் தெரிய விக்ரம் பிரபு மற்றும் இரு போலீசார்களுடன் அங்கு சென்று பார்க்கும் பொழுது பேருந்து போய்விட்டது இவர்களை காணும் என்பதால் நான் இங்கு வந்து சரணடைந்தேன் என்று கூறுவான் அது விக்ரம் பிரபுவுக்கு மிகவும் பிடித்திருக்கும். விக்ரம் பிரபு உடன் வந்திருக்கும் போலீசார் துப்பாக்கிகளை லோடு செய்து வைத்திருப்பார் அப்போது எங்கே உங்க புல்லட் என்று போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி கேட்க விக்ரம் பிரபு உடன் வந்த போலீசார் புல்லோடு செய்திருக்கு சார் என்று கூற வெளிய வரும்போது புள்ளோடு செய்யக்கூடாதுனு உங்களுக்கு தெரியாதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பும்போது இல்ல சார் அவ ஒரு முஸ்லிம் என்று கூட்டிட்டு வந்த போலீசார் கூட முஸ்லிம்னா என்ன நானும் முஸ்லிம் தான்டா என்று சமூகப் பிரச்சனையை முன் வைத்திருப்பார் இயக்குனர் அது மிகவும் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றது.
அதன் பிறகு விக்ரம் பிரபுவுக்கும் அப்துலுக்கும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. அப்துல் நடந்த கதையை விக்ரம் பிரபுவிற்கு எடுத்துச் சொல்கிறார். விக்ரம் பிரபுவிற்கு அப்துலே மிகவும் பிடித்து விட்டது அவருக்கு உதவ வேண்டுமென்று விக்ரம் பிரபு முடிவு செய்கிறார். ஒரு ஊரு ஒருவர் மட்டும் முஸ்லிம் அவர் எப்படி எல்லாம் அந்த ஊரில் பாதிக்கப்படுகிறார் என்பதை இந்த கதையின் மையக்கருத்தாக இருந்து வருகிறது அப்துல் என்பவர் தனது அம்மாவுடன் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வர அந்த ஊரில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் அந்தப் பெண்ணின் மாமா சரியான குடிகாரன் என்பதால் ஒரு சண்டையில் வாக்குவாதம் ஏற்பட்டு அப்துல் அம்மாவை அம்மாவை தவறுதலால் பேசி விடுகிறார் அதற்கு அப்துல் காதலின் மாமாவிடம் சண்டை போடுகிறார் இது ஒரு பெரிய வன்மமாக இருந்து வருகிறது. இதன் பிறகு அப்துல் கும் அந்தப் பெண்மணி ஆனா கலையரசியும் இரண்டு வரும் காதலிப்பதை அறிந்து கொள்கிறார் கலையரசியின் அம்மா அந்த விஷயம் அவர் அப்பாவிற்கு தெரிய அவங்க அப்பா பெரும் கோபக்காரர்.
அவர் அப்துளை நடுரோட்டில் வைத்து அடித்து அவங்க அம்மாவை நெஞ்சில் எட்டி மித்ததால் அவங்க அம்மா மயக்கம் போட்டு கீழே விழுகிறார் அதை கண்ட அப்துல் கலையரசியின் அப்பாவை அடித்து கீழே விழுந்து மண்டையில் அடிபடும் வைக்கும் பொழுது அவர் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார். ஆனால் அது அப்துல் க்கு அப்போது தெரியாது அதன் பிறகு அப்துல்லா அவர்கள் அம்மாவை மருத்துவமனைக்கு சென்று அனுமதித்து பார்க்கும் பொழுது காலையில் அதே மருத்துவமனையில் கலையரசியின் அப்பா இறந்து விட்டதாக அவனுக்கு தெரிய வருகிறது அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்துல் நான் தான் கொலை செய்தேன் என்று போலீசாரிடம் சென்று சரணடைந்து விடுகிறார். இதன் மூலம் அவர் ஜெயிலுக்குள் வருகிறார். இதன் பிறகு தான் கதையே ஆரம்பிக்கிறது. ஆனால் கலையரசியோ காதலனுக்கு துணையாகவே நின்று வருகிறாள் 5 வருடமாக நீதிமன்றத்திற்கு வந்து அவரைப் பார்த்துவிட்டு செல்கிறார். இவர் சரண் அடைந்து ஐந்து வருடமாக இவருடைய வழக்கு நீதிமன்றத்தில் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாதால் இவர் ஐந்து வருடமாகவே சிறையில் வாழ்ந்து வருகிறார்.
இது அனைத்தையும் கேட்டேன் விக்ரம் பிரபு நீதிமன்றத்திற்கு சென்று அங்கு நீதிபதியிடம் கலையரசி மற்றும் அப்துல் இருவரையும் அவர்கள் காலில் விழுங்கள் என்று கூறுகிறார் இவர்கள் இருவரும் நீதிபதி ரத்தினசாமி அவர்களிடம் காலில் விழ எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா நான் ஐந்து வருடமாக சிறையில் இருக்கிறேன் நான் ஒரு அனாதை இந்த பொண்ணுடைய அப்பாவை நான் கொன்று விட்டேன் என் அம்மாவை அடிச்சதனால அடித்தேன்.
ஆனால் அவர் இறந்து விடுவார் என்று எனக்கு தெரியாது அட எங்க அம்மா இறந்துட்டாங்க சார் என்றெல்லாம் சொல்லி அழுக நீதிபதி இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்கே வரவில்லை அது எங்களுடைய அலட்சியத்தாலே இருக்கும் ஒரு கொலை தண்டனைக்கு ஐந்து வருடமாக எதுவும் செய்யாமல் இருப்பது எங்கள் தவறு தான் எங்களை மன்னித்துவிடு அப்துல் அடுத்த ஏரியில் கண்டிப்பாக உனக்கு விடுதலை கொடுக்கப்படும் என்ற சொன்ன வார்த்தையை கேட்டு இருவரும் சந்தோஷம் அடைய விக்ரம் பிரபு கட்டியணைத்து அழுதுனர். சந்தோசமாக செல்கிறார் கலையரசி மற்றும் அப்துல் மற்றும் விக்ரம் பிரபு மீண்டும் வேலூர் திரைக்கு வருகின்றனர் அடுத்ததும் நீங்களே வாங்க சார் என்று அப்துல் கூற விக்ரம் பூபாவும் அவருக்கு உதவ கதை தொடர்கிறது.
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல விக்ரம் பிரபு வராததால் மன வேதனை அடைந்த அப்துல் விக்ரம் பிரபுவை எதிர்பார்த்து இருக்கிறார். பிரபுவிற்கு விசாரணை நடத்த அவரை அதிகாரி த்து வைத்திருப்பார். அப்துல் மற்றும் போலீஸார்கள் நீதிமன்றத்திற்கு செல்ல நீதிபதி மாறி இருப்பார் வேறு நீதிபதி அன்று இருப்பதால் குழப்பம் அடைவார்கள் அப்துல் மற்றும் போலீசார். அப்துல்-க்கு மீண்டும் வாய்தா போட அப்துல் அந்த இடத்திலேயே சார் எனக்கு இந்த வாரம் விடுதலைன்னு சொன்னாங்க சார், எனக்கு யாரும் இல்ல சார் என்று கத்தி குமர ஓடி வருவார் விக்ரம் பிரபு. முன்னாள் நீதிபதி அப்துலுக்கு விடுதலை என்று கூறினார் கொஞ்சம் கேஸ் பைலை பாருங்க சார் என்று கூற கோபமடைந்த நீதிபதி நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறியா என்று கோபப்படுவார்.
இவனுக்கு நீ எப்படி ஜாமீன் வாங்குறது நானும் பாக்குறேன் என்று தீர்ப்பை தவறாக எழுதி விடுவார் நீதிபதி அவர் செய்ததால் அப்துல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயல்வார் தப்பித்து ஓடும் பொழுது தெற்கு கலையரசி வராததால் அவரைத் தேடி ஓடும் பொழுது ஒரு பேருந்தில் வந்து கொண்டிருப்பார் அத்துளைக் கண்டு கலையரசி பேருந்து நிறுத்த சொல்லி இறங்கி வருவார். கலையரசி பேருந்து விட்டு இறங்கி வரும்போது எதிரே வந்த பேருந்தை பார்க்காமல் கலையரசி இருப்பது போலவும் காண்பிக்கப்படும்.
அதைக் கண்ட அப்துல் சார் கலையரசி சார் என்று கத்திக்கொண்டே இருக்க விக்ரம் பிரபு ஓடி சென்று பார்ப்பார். ஆனால் கலையரசி இறந்து விட்டதாக நினைத்து ஓரமாக உட்காரும்போது அப்துளை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு அப்துளை சிறைக்குச் சென்று பார்க்கும் போது அப்துல் விக்ரம் பிரபுவை பார்த்து அழுது கொண்டிருக்க அங்கு இருந்து அப்பாடி என்ற ஒரு சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் கலையரசி நிற்பான் அது மிகப்பெரிய twistஆக இருந்தது அந்த படத்திற்கு.
பேருந்தின் ஓரத்தில் படுத்திருப்பாள் கலையரசி அவள் இறந்திருக்க மாட்டாள் இதுவே இந்த படத்தின் டீஸ்டாக உள்ளது. இந்த காட்சியை திரையரங்குகளில் சரியான சத்தம் மூலம் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தின ரசிகர்கள். அதன் பிறகு விக்ரம் பிரபு இருவரும் நன்றாக இருக்கிறார்கள் அப்துல் இன் கே சி நானும் எனது மனைவியும் எடுத்து நடத்தி விடுதலை பெற்று தந்தோம் என்று பயிற்சி அளிப்பதில் கூறுவார் மிகவும் அருமையாக இருக்கும் இந்த கதை.
படம் ஆயுதப்படை காவலர்களின் பணிச்சுமை மற்றும் சவால்களையும், விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் இருப்போரின் நிலையையும், காவல்துறையின் அமைப்பு முறைகளையும், சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சமூக அநீதிகளையும் உணர்வுபூர்வமான பரபரப்பு பாணியில் சித்தரிக்கிறது. ஒரு நேர்மையான காவலர் தனது கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையே சிக்கும் போராட்டமும், நீதிக்கான அவரது முயற்சியும் படத்தின் மையக்கருவாக அமைகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.