ரஜினி, நயனையே தூக்கி அடித்த விஜய், கீர்த்தி சுரேஷ்... 2020 ட்விட்டரில் செய்த மாபெரும் சாதனை...!

First Published Dec 14, 2020, 12:48 PM IST

எப்படா முடியும் என அனைவரும் காத்திருக்கும் 2020ம் ஆண்டு ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதனிடையே இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள், நடிகைகள், படங்கள் பட்டியலை ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 
 

எப்படா முடியும் என அனைவரும் காத்திருக்கும் 2020ம் ஆண்டு ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதனிடையே இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள், நடிகைகள், படங்கள் பட்டியலை ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
undefined
அதன் படி அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் வக்கீல் சாப் படமும், அஜித்தின் வலிமை 3வது இடத்திலும், சூரரைப் போற்று 5வது இடத்திலும், தர்பார் 10வது இடத்திலும் உள்ளது.
undefined
2020ம் ஆண்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடம் பிடித்துள்ளார். புது மணப்பெண்ணான காஜல் அகர்வால் 2வது இடத்திலும், சமந்தா 3வது இடத்திலும், ரஷ்மிகா மந்தனா 4வது இடத்திலும், பூஜா ஹெக்டே 5வது இடத்திலும், டாப்ஸி 6வது இடத்திலும், தமன்னா 7வது இடத்திலும், ரகுல் ப்ரீத் சிங் 8வது இடத்திலும், ஸ்ருதி ஹாசன் 9வது இடத்திலும், த்ரிஷா 10வது இடத்திலும் உள்ளனர்.
undefined
2020ம் ஆண்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர் பட்டியலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதலிடம் பிடித்துள்ளார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டாவது இடத்திலும், தமிழ் சினிமாவின் சோசியல் மீடியா கிங்கான தளபதி விஜய் 3வது இடத்திலும் உள்ளனர். ஜூனியர் என்டிஆர் 4வது இடத்திலும், சூர்யா 5வது இடத்திலும், அல்லு அர்ஜுன் 6வது இடத்திலும், ராம் சரண் 7வது இடத்திலும், தனுஷ் 8வது இடத்திலும், மோகன்லால் 9வது இடத்திலும், சிரஞ்சீவி 10வது இடத்திலும் உள்ளனர்.
undefined
அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரும், அதேபோல் நடிகைகள் பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இல்லாதது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
undefined
click me!