தங்கல் திரைப்படத்திற்காக முதலில் டாப்சி பன்னு, தீக்ஷா சேத் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோரை அணுகினார்கள். அவர்கள் அமீர்கானின் மகள்களாக நடிக்க மறுத்துவிட்டனர். அதன்பின்னரே பாத்திமா சனா ஷேக் மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர். இப்படத்தில் அமீர்கானின் மனைவி கதாபாத்திரத்திற்காக மல்லிகா ஷெராவத் ஆடிஷன் செய்தார். ஆனால் அவர் அதில் தோல்வியடைந்தார். பின்னர் 70 நடிகைகளுக்கு ஆடிஷன் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த கதாபாத்திரத்தில் சாக்ஷி தன்வர் நடித்தார். அமீர்கான் இந்த கதாபாத்திரத்தை நிராகரித்திருந்தால் மோகன்லால் அல்லது கமல்ஹாசன் நடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.