- Home
- Gallery
- ரிஸ்க் எடுக்குறதெல்லாம் இவங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி - படத்துக்காக உடல் எடையை குறைத்த டாப் ஹீரோஸ் லிஸ்ட்
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் இவங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி - படத்துக்காக உடல் எடையை குறைத்த டாப் ஹீரோஸ் லிஸ்ட்
சினிமா மீதுள்ள காதலால் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களைப் பற்றியும் அவர்கள் எந்த அளவு உடல் எடையை குறைத்துள்ளார்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

vikram
சீயான் விக்ரம்
தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய நடிகர் என்றால் அது விக்ரம் தான். இவர் ஷங்கர் இயக்கிய ஐ படத்துக்காக 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார்.
Prithviraj
பிருத்விராஜ் சுகுமாரன்
பிளெஸி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் 31 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.
Randeep Hooda
ரன்தீப் ஹூடா
பாலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ரன்தீப் ஹூடா. இவர் வீர் சாவர்க்கர் என்கிற படத்திற்காக சுமார் 32 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் கோலிவுட்டில் பேய் சீசன் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. அரண்மனை 4 வெற்றிக்கு பின் காஞ்சனா 4 அப்டேட் தந்த லாரன்ஸ்
Aamir Khan
அமீர் கான்
பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான். இவரது சினிமா கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது தான் டங்கல். இப்படத்திற்காக 25 கிலோ உடல் எடையை அதிகரித்து குண்டான அமீர்கான், பின்னர் சில மாதங்களிலேயே சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி ஆச்சர்யப்படுத்தினார்.
Suriya
சூர்யா
கோலிவுட்டில் நடிப்பின் நாயகனாக கொண்டாடப்படுபவர் சூர்யா. அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் முதன்முறையாக நடித்த சூரரைப் போற்று படத்துக்காக சுமார் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்தார். அப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
rahul
கே.ஆர்.ராகுல்
பிருத்விராஜ் சுகுமாரன் உடன் ஆடுஜீவிதம் படத்தில் ஹக்கீம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கே.ஆர்.ராகுல் அப்படத்திற்காக 28 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார்.
jayam Ravi
ஜெயம் ரவி
ஜெயம் ரவியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் ஸ்கூல் பையனாக நடிப்பதற்காக 18 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதுவும் இரண்டே மாதத்தில் அவர் எடையை குறைத்தாராம்.
இதையும் படியுங்கள்... Chaitra Reddy : கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் சொன்ன கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி - குவியும் வாழ்த்து