'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' இன்றைய 433 ஆவது எபிசோடானது குமாரவேல் சத்தியம் செய்யும் காட்சியுடன் தொடங்கியது. நேற்றைய எபிசோடில் அவரது பாட்டி சத்தியம் கேட்கும் காட்சியுடன் முடிந்த நிலையில், இன்றைய எபிசோடில் குமாரவேல் தனது அப்பா சக்திவேல் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.
கோமதி அழுவதை பார்த்து கதறும் காந்திமதி
5 பிள்ளைகளை பெற்றும் ஒரு பிள்ளையால் கூட அவள் சந்தோஷமாக இல்லையே என்று வேதனை படுகிறார். அரசியிடம் இப்போது உனக்கு நிம்மதியா? நல்லா இருந்த மனுஷனை இப்போ விட்டு வெளியே அனுப்பிடியே என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டுவதோடு, குடும்ப மானம், கௌரவத்தை இப்படி சீர்குலைத்துவிட்டதே, யாருக்கு எந்த கெடுதல் பண்ணுனோம், எங்களுடைய குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என்று கோமதி அழுது புலம்புகிறார்.
கால் போன போக்கில் நடந்து போகிறார் பாண்டியன்:
வீட்டைவிட்டு சென்ற பாண்டியன் எங்க போனார், என்ன செய்கிறார் என்று தெரியாமல் செந்தில், கதிர், பழனிவேல் ஆகியோர் தேடி செல்கிறார்கள். அவர் கடைக்குத்தான் போயிருப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், பாண்டியன் வெளியில் சென்ற போது மழை பெய்வதால், மழையில் நனைந்தபடி கோயிலுக்கு சென்றார். அப்படியே கால் போன போக்கில் நடந்து சென்று நிலைகுலைந்து அமர்கிறார்.
Pandian Stores: சண்டை போட்ட பழனி; குமரவேலுக்கு விழுந்த தர்ம அடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
அரசி குறித்த பிளாஷ் பேக்
இதன் பின்னணியில் பாடல் காட்சியோடு.... பாண்டியன் அரசியை எப்படியெல்லாம் வளர்த்தார் என்று பிளாஷ்பேக் காட்சியாக காட்டப்படுகிறது. கடைசியாக நீ எப்படி அவனை காலிச்ச, என்னிடமாவது சொல்லிருக்கலாம் இல்ல, நான் ஏதாவது ஐடியா கொடுத்திருப்பேன் என்று ராஜீ, அரசிக்கு ஆறுதல சொல்கிறார். அதோடு இன்றைய 433ஆவது எபிசோடு முடிகிறது.