தமிழ் நடிகை ஒருவர் தியேட்டரில் ரூ.300 கோடி வசூல் படத்தை கொடுத்தது மட்டுமின்றி ஓடிடியில் தரமான வெப் தொடரில் நடித்து 2025-ல் டபுள் ஹிட் கொடுத்திருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 2025-ம் ஆண்டு சக்சஸ்புல்லாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் 2 மெகா ஹிட் அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அது என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
25
Aishwarya Rajesh
சன் டிவியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் ஐஸ்வர்யா. காக்கா முட்டை வெற்றிக்கு பின்னர் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன.
35
Aishwarya Rajesh Hit Movies
அந்த வகையில் தனுஷுடன் வட சென்னை, விஜய் சேதுபதி ஜோடியாக பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை, விக்ரம் ஜோடியாக சாமி 2 என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்தது மட்டுமின்றி, கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த நடிகை என்கிற பெருமையையும் பெற்றதோடு, அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவ்வப்போது தலைகாட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, இந்த ஆண்டு செம சக்சஸ்புல்லாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு அவர் நடிப்பில், ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ என்கிற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு ரூ.300 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வந்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் இதுவாகும்.
55
Suzhal 2
இதையடுத்து பிப்ரவரி மாதம் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சுழல் வெப்தொடரின் இரண்டாவது சீசன் ரிலீஸ் ஆனது. இதன் முதல் சீசனே மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஓடிடியில் நம்பர் 1 வெப் தொடராக டிரெண்டாகி வருகிறது. இப்படி 2025-ம் ஆண்டு இரண்டே மாதங்களில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் பம்பர் ஹிட் அடித்துள்ளதால் செம குஷியில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.