7வது மற்றும் 8வது சம்பள கமிஷனுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன? ஃபிட்மென்ட் ஃபாக்டர், அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA), HRA முதல் அமல்படுத்தப்படும் காலம் வரை முழுமையான ஒப்பீடு இதோ.
7வது சம்பள கமிஷன், 2014 பிப்ரவரியில் அமைக்கப்பட்டு 2016 முதல் அமலுக்கு வந்தது. 8வது சம்பள கமிஷன், 2025 நவம்பர் 3 அன்று அரசிதழ் மூலம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. 7வது கமிஷன் 21 மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. 8வது கமிஷன், அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள், அதாவது சுமார் 2027 மே மாதத்திற்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
210
யார் தலைமையில் கமிஷன்கள்?
7வது சம்பள கமிஷனுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமை தாங்கினார். 8வது சம்பள கமிஷனுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
310
சம்பள உயர்வுக்கு ரெஃபரன்ஸ் தேதி
7வது சம்பள கமிஷன் அமல்படுத்துவதற்கான ரெஃபரன்ஸ் தேதி ஜனவரி 1, 2016 ஆக இருந்தது. 8வது சம்பள கமிஷனிலும், திருத்தப்பட்ட சம்பளத்திற்கான ரெஃபரன்ஸ் தேதி ஜனவரி 1, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7வது சம்பள கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. 8வது சம்பள கமிஷனில் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், நிபுணர்களின் கணிப்புப்படி 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம். சில மத்திய அரசு மதிப்பீடுகள் இது 2.28 முதல் 2.46 வரை இருக்கலாம் எனக் கூறுகின்றன.
510
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்
7வது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. 8வது சம்பள கமிஷனில், இறுதி செய்யப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பொறுத்து, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.34,560 முதல் ரூ.51,480 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்- 8th Pay Commission: கன்சல்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! முழு விவரம் உள்ளே
7வது சம்பள கமிஷனில், 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு என்பிஎஸ் (NPS) திட்டம் முக்கியத்துவம் பெற்றது. 8வது சம்பள கமிஷனில், மத்திய அரசு அறிவித்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மற்றும் என்பிஎஸ்-இல் தேவையான சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்-8th Pay Commission: முழு அட்டவணை வெளியீடு! எந்தெந்த நகரங்களில் மீட்டிங் நடக்குது தெரியுமா?
7வது சம்பள கமிஷன் சுமார் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்குப் பலனளித்தது. 8வது சம்பள கமிஷன் மூலம் சுமார் 48.62 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.85 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்- Gold Loan: தொழில் தொடங்க உதவும் நகைக்கடன்.! கட்டு கட்டா பணம் பெற எளிய வழிமுறைகள்!