இந்த நன்மைகள் தற்செயலான காயம் அல்லது இறப்பு இரண்டையும் உள்ளடக்கும். இருப்பினும், ஒவ்வொரு வகை அட்டையும் வெவ்வேறு அளவிலான கவரேஜை வழங்குகிறது. உதாரணமாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) கோல்ட் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்குகிறது. விமான விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ. 4 லட்சமும், விமானம் அல்லாத விபத்துக்களுக்கு ரூ. 2 லட்சமும் கவரேஜ் வழங்குகிறது. பிரீமியம் கார்டுதாரர்களுக்கு, விமான விபத்துகளுக்கு ரூ.10 லட்சமாகவும், விமானம் அல்லாத சம்பவங்களுக்கு ரூ.5 லட்சமாகவும் கவரேஜ் அதிகரிக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் டெபிட் கார்டின் வகையின் அடிப்படையில் பல்வேறு அளவிலான காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன. சில சமயங்களில், கவரேஜ் ரூ. 3 கோடி வரை செல்லலாம்.