வருமான வரிச் சலுகையுடன் மாதம் ரூ.60 ஆயிரம் கிடைக்கும்! இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாமே!

First Published | Sep 22, 2024, 3:30 PM IST

ஸ்மார்ட் முதலீட்டாளராக முதலீடு செய்தால், PPF கணக்கைப் பயன்படுத்தி ஓய்வுக்குப் பிறகு வரியில்லா ஓய்வூதியத்தைப் பெறலாம். இது தபால் அலுவலகத்தின் பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

Pension scheme for senior citizens

தபால் அலுவலகத்தின் பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்றான பொது வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்பதால், பலர் இதில் முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைத் திரட்ட முடியும். PPF இன் விதிகளை கவனமாகப் படித்து, அந்த விதிகளின்படி ஸ்மார்ட்டாக முதலீடு செய்தால், ஓய்வுக்குப் பிறகு வரியில்லா பென்ஷனைப் பெறலாம்.

Pension scheme for senior citizens

பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால் 5-5 வருடங்களாக மேலும் நீட்டிக்கவும் வாய்ப்பு உண்டு. அதாவது 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் என இத்திட்டத்தைத் தொடரலாம். இதில் டெபாசிட் செய்த தொகையை 5 ஆண்டுகள் நீட்டிக்கும்போது, அப்போது உள்ள வட்டி விகிதம் எவ்வளவோ அது தொடர்ந்து கிடைக்கும். ஆனால், திட்டத்தை 5 ஆண்டுகள் நீட்டித்து முன்பு போலவே முதலீடு செய்துவந்தால் ஏற்கெனவே கிடைத்துவந்த வட்டி விகிதம் தொடர்ந்து கிடைக்கும். தற்போதைய நிலையில் இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதம் ஆகும்.

Latest Videos


Pension scheme for senior citizens

முதிர்ச்சியடையும்போது நீங்கள் பணத்தை எடுக்காமல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், இரண்டு விதமான பலன்களைப் பெறலாம். ஒரு வாய்ப்பில் முதிர்ச்சியடைந்த பிறகு எதையும் முதலீடு செய்யாமல் திட்டத்தை நீட்டிப்பதால், நீட்டிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் கிடைத்த முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். இன்னொரு வாய்ப்பில், நீட்டிக்கப்பட்ட காலத்தில் முன்பு போலவே தொடர்ந்து முதலீடும் செய்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் 60 சதவிகிதம் வரை பணத்தை எடுக்கலாம்.

Pension scheme for senior citizens

PPF கணக்கில் 35 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், 15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகும் இந்தத் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உங்களுக்கு வாய்ப்பு இருக்கும். அதாவது, உங்களுக்கு 60 வயதாகும் வரை, ​​இந்த திட்டத்தில் 25 ஆண்டுகளாகத் தொடரலாம்.

Pension scheme for senior citizens

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை PPF கணக்கில் டெபாசிட் செய்யலாம். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.1 சதவீத வட்டி விகிதத்தில், 15 வருட முதிர்வு காலத்தில், ரூ.40,68,209 தொகை வரும். இதை இன்னும் 5-5 வருடங்கள், அதாவது அடுத்த 10 வருடங்கள் இந்த முறையில் தொடர்ந்து முதலீடு செய்தால், 25 வருடங்கள் கழித்து ஒரு கோடி ரூபாய் ஆகிவிடும்.

Pension scheme for senior citizens

25 வருட முதலீடு முடியும்போது வயது 60 ஆகியிருக்கும். பணி ஓய்வு அடைந்திருக்கும் சூழலில், கூடுதலாக எந்த முதலீடும் செய்யாமல் PPF கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். கணக்கில் இருக்கும் ஒரு கோடி ரூபாய் நிதிக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும். தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரூ.7,31,300 வட்டி கிடைக்கும்.

Pension scheme for senior citizens

எதையும் முதலீடு செய்யாமல் கணக்கைத் தொடர்ந்தால், நீட்டிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முழு நிதியையும் திரும்பப் பெறலாம். வட்டி பணத்தை மட்டும் எடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ரூ.7,31,300 எடுக்கலாம். அதாவது, மாதம் தோறும் ரூ. 60,917 கிடைக்கும். இந்த வருமானத்துக்கு வருமான வரி வரியும் ஏதும் விதிக்கப்படாது.

click me!