
பெரும்பாலான மக்கள் ரிஸ்க் எடுக்கத் துணிவதில்லை. முதலீடுகளின் விஷயத்திலும் அப்படித்தான். மோசமான சந்தை நிலவரத்தின்போது மூலதனத்திற்கு இழப்பும் ஏற்படும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதுபோன்ற முதலீடுகள் குறித்த பயம் நிதியை வளர்த்தெடுக்க தடையாக இருக்கும்.
முதலீடுகளில் விரைவாக வருமானம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது பெரும்பாலும் ஏமாற்றம் அளிக்கும் முடிவையே கொடுக்கும். பேராசையைத் F&O வர்த்தகம், ஆன்லைன் கேமிங் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவை சமீப காலமாக ஏராளமான மக்களுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பெற்றோர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மற்றவர்கள் கூறும் முதலீட்டு அனுபவங்களைக் கேட்டு முடிவு எடுப்பது நேர்மறையானவும் எதிர்மறையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். முதலீட்டு உத்திகள் பெரும்பாலும் நபருக்கு நபர் வேறுபட்டது. எனவே, யார் கூறும் யோசனையையும் பரிசீலித்து முடிவு எடுப்பது நல்லது.
சில முதலீட்டாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், சிட் ஃபண்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவை மட்டுமே பாதுகாப்பானது மற்றும் சிறந்தது என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வகை முதலீடுகள் சிறந்த வருவாயை வழங்கினாலும், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக லாபம் தரும் முதலீடுகளில் ஈடுபாடு காட்டுவதில்லை. பகுப்பாய்வு மற்றும் புரிதல் தேவைப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் இருந்து விலகி இருக்க முனைகிறார்கள்.
பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதம் மிக முக்கியானதாக இருக்கிறது. பிக்ஸட் டெபாசிட், காப்பீட்டுத் திட்டங்கள், அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் போன்ற வருமான உத்தரவாதத்தை வழங்கும் முதலீடுகளால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சந்தை சார்ந்த முதலீடுகளில் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும்.
சமீபத்திய அனுபவம் முதலீட்டாளர்களின் பெரும்பகுதியை பாதிக்கிறது. இதனால், அண்மைக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டவற்றில் அதிக முதலீடு செய்ய முனைகின்றனர். உற்பத்தி, நுகர்வு மற்றும் பாதுகாப்பு, ஸ்மால்கேப், மிட்கேப் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் போக்கு பெரிய அளவில் உள்ளது.
ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்றவற்றிலேயே முதலீடு செய்யும் வழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவற்றில் தான் தங்கள் முதலீடு பத்திரமாக இருப்பதாக உணர்கிறார்கள். இது ஒரு தவறான நிலைப்பாடு. ஈக்விட்டி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள் மற்றும் தங்கத்தின் மீதான டிஜிட்டல் முதலீடுகளான தங்க ஈடிஎஃப், கோல்ட் ஃபண்டுகள் போன்ற டிஜிட்டல் வடிவங்களிலும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் காலத்தில் முதலீட்டு முடிவுகளில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது. அதுவும் இளம் முதலீட்டாளர்கள் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. செபி நிதி சார்ந்த ஃப்ளூயன்ஸர்களுக்கான வலுவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது ஆனால், அவற்றைக் கண்டிப்பாக செயல்படுத்த முடியவில்லை.
ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் கிடைக்கும் முதல் அனுபவம் முதலீட்டாளரின் மனதில் இடம்பிடித்துவிட்டால், அது முதலீட்டை மீண்டும் மீண்டும் மேற்கொள்வார்கள். முதலீடு செய்வதில் முதல் அனுபவம் செல்வாக்கு செலுத்துகிறது. குறிப்பாக, சந்தையுடன் தொடர்புடைய முதலீடுகளின் விஷயத்தில் இது மிகவும் சகஜமாக உள்ளது.
ஒருவரின் நிதி நிலையும் முதலீட்டு முடிவுகளில் தாக்கம் செலுத்துகிறது. பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பவர்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது கையில் பணம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் அளவுக்கு மீறி அதிக ரிஸ்க் எடுக்கத் துணிவார்கள். டெர்ம் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் முதலீட்டாளர்களிடம் அடிக்கடி காணப்படும் பண்பு இது.
முதலீட்டாளர்கள் முதலீட்டு நிபுணர்களுடன் தொடர்ந்து உரையாடலைக் கொண்டிருக்க வேண்டும். விவரம் அறிந்து சரியான நேரத்தில் பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு நிபுணர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக அமையும். போர்ட்ஃபோலியோக்களை சரியாக மதிப்பிடுவது குறித்த அனுபவத்தை இதன் மூலம் வளர்த்துக்கொள்ளலாம். இது எந்தவிதமான சார்பும் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் முதிர்ச்சியை முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கும்.