metrological
இந்திய வானிலை ஆய்வுத் மையம் (IMD) பொதுமக்களுக்கு வானிலை தொடர்பான அறிவிப்புகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது தவிர, பல்வேறு துறைகளுக்கு அளிக்கும் சேவைகள் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறது. இப்போது அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் ஒரு முக்கிய நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் செயல்படும் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் நிறுவனமாக இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளது. 2022-23 நிதியாண்டில் இருந்து ரூ.226 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) வழங்கப்படும் விமான வானிலை ஆய்வு சேவைகளிலிருந்து கணிசமான தொகையைச் சம்பாதித்து வருகிறது.
India Meteorological Department
சென்னையை தளமாகக் கொண்ட தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) வருவாய் ஈட்டும் வகையில் சுமார் 42 தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது என்று புவி அறிவியல் அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது ரூ.24 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது.
விமான நிலைய ஆணையத்துக்கு விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வானிலை தரவுகளை விற்பனை செய்தல், குறிப்பிட்ட கால வானிலை அறிக்கைகள் மற்றும் உபகரணங்களை சோதனை செய்தல் ஆகிய சேவைகள் மூலம் வானிலை ஆய்வு மையம் வருவாய் ஈட்டியுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அளிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் ரூ.66 கோடியை ஈட்டியிருக்கிறது.
India Meteorological Department
இவ்வாறு வருவாய் ஈட்டுவது முக்கியமான திட்டங்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் சிறப்புத் தேவைகளை மனதில் கொண்டு, அத்துறையின் தேவைகளுக்கு ஏற்ற ஒரு புதிய தரவு தயாரிப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக மக்களவை உறுப்பினர் புவனேஸ்வர் கலிதா தலைமையிலான குழு இத்தகவல்களைத் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை நிகழ்வுகளைக் கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கிவருகிறது. இந்த முன்னறிவிப்புகள் பிற தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடர் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.