EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு. இது ஊழியர்களுக்கு ஓய்வூதியம், உதவி வழங்குகிறது. இனி PF பணம் எடுப்பது எளிதாகும். EPFO இதற்கான புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. விண்ணப்பித்த 3 நாட்களில் பணம் உங்கள் கையில் கிடைக்கும். இதுவரை க்ளைம் செய்தவுடன் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனிமேல் அதற்கு அவசியமில்லை. மிக விரைவாக உங்களுக்கு க்ளைம் செய்யப்படும்.
24
EPFO New Rules
ரூ.1 லட்சம் வரை க்ளைம்கள்
தற்போது 60% வரை க்ளைம்கள் தானியங்கி முறையில் நடைபெறுகின்றன. இந்த மாற்றங்களுக்குப் பிறகு ரூ.1 லட்சம் வரை க்ளைம்கள் 3 நாட்களில் நடக்கும். உடல்நலம், மருத்துவ செலவுகள், வீடு, படிப்பு, திருமணம் போன்ற க்ளைம்கள் விரைவில் கிளியர் செய்யப்படும்.
பெயர், பாஸ்புக் விவரங்கள் மாற்றம் எளிது
ஆதாருடன் இணைந்த UAN உள்ளவர்கள், EPFO அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் பெயரை மாற்றலாம். தற்போது 96% மாற்றங்கள் EPFO அலுவலகம் இல்லாமல் நடக்கிறது.
UPI மூலம் EPF க்ளைம் பேமெண்ட்ஸ் வழங்க NPCI உடன் பேசுகிறார்கள். முடிந்தால் டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் எடுக்கலாம்.
EPFO வின் இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 (நாளை) முதல் அமலுக்கு வர உள்ளன. இது குறித்து முழு விவரங்களை EPFO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.