Vegetable price: கூடை கூடையாய் விற்று தீர்ந்த காய்கறிகள்.! இனி தினமும் 2 கூட்டு 3 பொரியல்தான்.!

Published : Dec 04, 2025, 11:24 AM IST

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால், தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை பாதியாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவால் மகிழ்ச்சியடைந்த இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள், காய்கறிகளை கூடை கூடையாக வாங்கிச் சென்றனர்.

PREV
14
பாதியாக குறைந்த காய்கறிகள் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், விலையில் சரிவு காணப்பட்டது. இதனால் காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது. இதனை அறித்த இல்லத்தரசிகள்  கூடை கூடையாய்    காய்கறிகளை வாங்கிச்சென்றனர். கோயம்பேடு சந்தைக்கு காலையிலேயே பொதுமக்கள் கூடியதால் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளித்தது. 

24
நிரம்பி வழிந்த கோயம்பேடு மார்க்கெட்

காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் பல காய்கறிகள் கூடை கூடையாக விற்றுத் தீர்ந்தன. தக்காளி கிலோ ரூ.40 விலையில் இருந்தாலும் வாங்குபவர்கள் பை பைகளாக எடுத்துச் சென்றனர். சில நாட்களுக்கு முன் தக்காளி விலை 80 ரூபாயாக இருந்தது. அதேபோல் பெரிய வெங்காயம் கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்து 30 ரூபாயாக உள்ளது.

1 கிலோ பீன்ஸ் ரூ.45 ரூபாயாகவும், அவரைக்காய் ரூ.35 ரூபாயாகவும், கேரட் ரூ.40 ரூபாயாகவும், வெண்டைக்காய் ரூ.70 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ரூ.35 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

34
இந்த காய்கறிகள் எல்லாம் ரூ.10 தான்

1 கிலோ பீட்ரூட் 30 ரூபாயாகவும் குடைமிளகாய் 60 ரூபாயாகவும், கத்தரிக்காய் 10 ரூபாயாகவும் இருந்ததால் பொதுமக்கள்  காய்கறிகளை தயங்காமல்  அள்ளிச்சென்றனர்.  1 கிலோ மாங்காய் ரூ.40க்கும், இஞ்சி ரூ.70 க்கும், பச்சை பட்டாணி ரூ.100க்கும், சேனைக்கிழங்கு ரூ.46க்கும், பாவக்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டன. தேங்காய் கிலோ ரூ.60க்கும் கோஸ் ரூ.15 க்கும், முருங்கை ரூ.300 க்கும் என விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ  உருளைக்கிழங்கு ரூ.20 க்கும் பரங்கிக்காய் ரூ.10 க்கும் லெமன் ரூ.50க்கும், சேப்பங்கிழங்கு ரூ.15 க்கும் விற்பனையானது.

44
வீடுகளில் தினமும் 2 கூட்டு, 3 பொரியல்

மொத்தத்தில், இன்று சந்தை முழுவதும் காய்கறிகள் விரைவாக விற்றுத் தீர்ந்த நிலையில், வீடுகளில் தினமும் 2 கூட்டு, 3 பொரியல் எளிதில் சமைக்கப்படும் அளவுக்கு பொருட்கள் கிடைத்துள்ளன. விலை குறைந்துள்ளதால் ஆரோக்கியமான காய்கறிகளை வாங்கி சமைத்து இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories