Vegetable Price: கிலோ 10 ரூபாய்க்கு இத்தனை காய்கறிகளா?! நாட்டு காய்கறிகள் சேல்ஸ் அடி தூள்.!

Published : Dec 10, 2025, 09:29 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் சவ்சவ், முட்டைக்கோஸ் போன்ற பல காய்கறிகளின் விலை கிலோ ரூ.10-15 ஆக குறைந்துள்ளது, இது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதிக வரத்து மற்றும் நல்ல உற்பத்தி காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

PREV
15
சாதாரண மக்களுக்கு பெரிய நிம்மதி

சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தையில் இன்று விலை நிலவரம் சாதாரண மக்களுக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. குறிப்பாக சவ்சவ், முட்டைக்கோஸ், வரி கத்திரிக்காய் போன்றவற்றின் விலை கிலோ ரூ.10–15 என்ற அளவுக்கு சரிந்துள்ளதால், வீட்டு செலவை குறைக்க இது மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது. இந்த விலை சரிவிற்கு அதிக வரவு, நல்ல காலநிலை, விவசாயப் பகுதிகளில் கணிசமான உற்பத்தி ஆகியவை முக்கிய காரணங்களாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

25
காய்கறிகளை அள்ளி செல்லலாம்

கோயம்பேடில் 1 கிலோ சவ்சவ் ரூ.10–15க்கும் , முட்டைக்கோஸ் ரூ.10–15, வரி கத்திரிக்காய் ரூ.10–15, வெள்ளரிக்காய் ரூ.15, சேமக்கிழங்கு ரூ.15, முள்ளங்கி ரூ.20 வரை, பாகற்காய் ரூ.20–25க்கும் விற்பனையாகிறது., குறிப்பாக சவ்சவ், முட்டைக்கோஸ் போன்றவை நாள் தோறும் பயன்படுத்தப்படும் காய்கறிகள் என்பதால், சாதாரண வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த விலை குறைப்பு மிகப் பெரிய உதவியாக உள்ளது.

35
பீன்ஸ் நாட் ஓகே வெங்காயம் ஓகே

பீன்ஸ் மட்டும் ஒரு கிலோ ரூ.20 உயர்ந்த நிலையில் முதல் தரம் ரூ.75, இரண்டாம் தரம் ரூ.70, மூன்றாம் தரம் ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தக்காளி விலை சாதாரணமாகவே உள்ளது — முதல் தரம் ரூ.40, இரண்டாம் தரம் ரூ.35, மூன்றாம் தரம் ரூ.30. நவீன தக்காளி ரூ.50க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் முதல் தரம் ரூ.70 முதல் மூன்றாம் தரம் ரூ.60 வரை இருக்கும் நிலையில், கர்நாடக வெங்காயம் ரூ.20–24 விலையில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கு ரூ.23 முதல் ரூ.40 வரை தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

45
உஜாலா விற்பனை ஜோர்

பீட்ரூட் ரூ.25–30, முள்ளங்கி ரூ.20–25, உஜாலா கத்திரிக்காய் ரூ.15–20, வெண்டைக்காய் ரூ.30–40, காராமணி ரூ.35–40 ஆகியவை மிதமான விலையிலும், குடும்பங்களின் தினசரி செலவுக்கு ஏற்ற விலையிலும் கிடைக்கின்றன. புடலங்காய் முதல் தரம் ரூ.25, இரண்டாம் தரம் ரூ.20; சுரக்காய் ரூ.20–25; சேனைக்கிழங்கு ரூ.30–40,காலிபிளவர் ரூ.25–35 ஆகியவையும் வாங்குபவர்களை கவரும் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

55
முருங்கைக்காய் மட்டும் விலை உயர்வு

முருங்கைக்காய் மட்டும் உயர்ந்த விலையில் உள்ளது — முதல் தரம் ரூ.250, இரண்டாம் தரம் ரூ.230, மூன்றாம் தரம் ரூ.150. பட்டாணி ரூ.80–90, பச்சை மிளகாய் ரூ.30–35, இஞ்சி ரூ.60–70, பூண்டு ரூ.50–110 ஆகியவை சந்தையின் உயர்வான விலைப்பட்டியலில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான நாட்டு காய்கறிகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், கோயம்பேடு சந்தையில் இன்று உண்மையிலே “சேல்ஸ் அடி தூள்!” சூழல் நிலவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories