சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்.. மக்களுக்கு குட் நியூஸ்.. புதிய வந்தே பாரத் சேவை ஆரம்பம்

Published : Nov 05, 2025, 08:51 AM IST

இந்திய ரயில்வே பெங்களூரு - எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை அறிவித்துள்ளது. வாரம் ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், தென்னிந்தியாவின் பயண இணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

PREV
15
புதிய வந்தே பாரத் சேவை

இந்திய ரயில்வே மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென் இந்திய பயணிகளுக்கான முக்கிய முடிவாக, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விரைவில் பெங்களூரு - எர்ணாகுளம் இடையே தொடங்கப்படுகிறது. குறிப்பாக, இது கேரளாவுக்கு செல்லும் மூன்றாவது வேந்தர் பாரத் ரயில் என்பதால், பயணிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. தெற்கு ரயில்வே மண்டலம் இந்த ரயிலை பராமரிக்கிறது, மேலும் ரயில்வே அமைச்சகம் விரைவாக சேவையை ஆரம்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

25
பெங்களூரு–கேரளா ரயில்

26651 KSR பெங்களூரு - எர்ணாகுளம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூருவில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் நிலையத்தை அடையும். திரும்பும் போது, ​​26652 எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு பெங்களூருவை அடையும். பயண நேரம் சுமார் 7 மணி 40 நிமிடங்கள் ஆகும்.

35
சேலம் வந்தே பாரத் ரயில்

இந்த ரயில் பயண பாதை கோயம்புத்தூர் – பாலக்காடு வழியாக இருக்கும். அதனால் கோவை வழியாக பெங்களூரு அல்லது கேரளா செல்லும் பயணிகளுக்கு இது மிகப் பெரிய நன்மையாகும். அதேசமயம், சம்பளம் பெறும் பணியாளர்கள், வணிக பயணிகள், மாணவர்கள் போன்றவர்களுக்கு இது வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணமாக அமையும். குறிப்பாக அதிகாலை புறப்பட்டு, மதியத்திற்கு முன் கேரளா சென்று, அதே நாளில் திரும்பும் வசதி கிடைக்கிறது.

45
ஈரோடு ரயில் நிறுத்தம்

புதிய வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திரிசூர் ஆகிய ஏழு முக்கிய நிலையங்களில் நிற்கும். இது வாரம் ஆறு நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்படும். பயணி 7 நாற்காலி கார் + 1 Executive Chair Car வசதிகளுக்காக வழங்கப்படுகிறது.

55
தமிழகம் ரயில் சேவை

கேரளாவில் இதற்குமுன் இயங்கும் திருவனந்தபுரம் – காசர்கோட் மற்றும் திருவனந்தபுரம் – மங்களூர் வந்தே பாரத் ரயில்களுக்கு பிறகு, இது மூன்றாவது சேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேவை தொடங்கப்படுவதால் கேரளா - காங்கு - பெங்களூரு பகுதிகளுக்கு இடையேயான பயண இணைப்பு மேலும் வலுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories