Train Ticket Cancel Rules from April 1 2026 : ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் திருப்பித் தரப்படும் கட்டண விதிகளில் ரயில்வே புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல துறைகளின் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் புறப்படுவதற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், வழங்கப்படும் ரீ ஃபண்ட் கட்டணம் குறித்த விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வது மற்றும் அதற்கான ரீ ஃபண்ட் பெறுவது தொடர்பான புதிய நடைமுறைகள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
புதிய நடைமுறைகள் அமல்
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், அதிக களைப்பின்றியும் பயணம் செய்யும் வசதியை ரயில் வழங்குகிறது. இதன் காரணமாக ரயில் பயணத்தையே மக்கள் அதிகம் நாடுகின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் புதிய மாற்றத்தை ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் புறப்படுவதற்கு முந்தைய எட்டு மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது என ரயில்வே அறிவித்துள்ளது.
35
ரயில் டிக்கெட் ரீ ஃபண்ட்
ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பாக 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பி தரப்படும். 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்பவர்களுக்கு 75% தொகை திருப்பி தரப்படும். 72 நேரத்திற்கு முன்பாக ரயில் டிக்கெட் ரத்து செய்பவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் ஏப்ரல் 1, 2026 ஆம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
பயணிகள் தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையத்தில் மட்டுமே கேன்சல் செய்ய முடியும் என்கிற விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் டிக்கெட்டுகளை எந்த ரயில் நிலையங்களிலும் கேன்சல் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரை ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இருந்தது. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு (போர்டிங் ஸ்டேஷன்) மாற்றிக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
55
ரயில் டிக்கெட் கேன்சல் புதிய விதிகள் 2026
மேலும் ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்குதல் மற்றும் பயணிகளின் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஐந்து முக்கிய சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரத்து செய்யும் நேரம் - திருப்பி தரப்படும் தொகை
8 மணி நேரத்திற்கு குறைவாக - ரீ ஃபண்ட் இல்லை
24 மணி நேரம் முதல் 8 மணி நேரம் - 50% ரீ ஃபண்ட்
72 மணி நேரம் முதல் 24 மணி நேரம் - 75% ரீ ஃபண்ட்
72 மணி நேரத்திற்கு முன்பு - 100% ரீ ஃபண்ட்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.